வந்துட்டேனு சொல்லு.. ஆவேசமாக பேசிய சசிகலா! அதிர்ந்து போனதா எடப்பாடி டீம்.. நடக்க போகும் சம்பவங்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பால் நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் தான் என்ட்ரி கொடுப்பேன் என அதிரடியாக அறிவித்திருக்கிறார். இதை அடுத்து பிரிந்து போன ரத்தத்தின் ரத்தங்கள் சசிகலாவை நேரில் சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகி இருப்பது எடப்பாடி பழனிச்சாமி தரப்பினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தேர்தல், பிரச்சாரம், வாக்கு எண்ணிக்கை என பிசியாக இருந்த அதிமுக தனது வழக்கமான நிலைக்கு தற்போது திரும்பி இருக்கிறது. மீண்டும் அந்த கட்சிக்குள் பல்வேறு முட்டல் மோதல்கள் எனத் தொடங்கியுள்ளது

Sasikala Edappadi Palaniswami AIADMK vikravandi assembly by election 2024 2024

கட்சியிலிருந்து நீக்கப்பட்டாலும் நான் தான் அதிமுகவின் பொது செயலாளர் என அறிக்கை வெளியிட்டு வரும் சசிகலா மீண்டும் கட்சிக்குள் என்ட்ரி கொடுப்பேன் என ஆவேசமாக பேசியிருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

இதற்கு முன் பொறுமையாக பேசிய சசிகலா தற்போது பொங்கி எழுந்துள்ள நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சற்று ஆட்டம் காண தொடங்கி இருக்கிறது. தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளர் இருந்த ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு பிரச்சனைகள் எழுந்தது. ஓ.பன்னீர்செல்வம் இடைக்கால முதலமைச்சராக பொறுப்பேற்றது, சசிகலா கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்தது, அவர் சிறைக்குச் சென்றது, கூவத்தூர் ரிசார்ட், டிடிவி தினகரன் வெளியேற்றம், சட்ட மன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு, எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக தொடர்ந்தது, ஓபிஎஸ் - இபிஎஸ் இணைந்தது, ஓபிஎஸ் ஓரம் கட்டப்பட்டது, சட்ட போராட்டம் என பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து நிலையில் மக்களவைத் தேர்தலானது இந்த விவகாரங்களுக்கு சற்றே ஓய்வு கொடுத்தது.

மக்களவைத் தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கட்சிக்குள்ளேயே அவரது ஆதரவாளர்கள் இரு அணியாக செயல்படுவதாக கூறப்படுகிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு இதை மறுத்து வந்தாலும் உட்கட்சி பூசல் எழுந்திருப்பது உண்மைதான் என்கின்றனர் அதிமுகவினர். கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சில மூத்த முன்னாள் அமைச்சர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். வேறு சில நிர்வாகிகள் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது மட்டும் இல்லாமல் ஓபிஎஸ் தரப்பில் இருந்த புகழேந்தி உள்ளிட்டவர்கள் தனியாக ஒருங்கிணைப்பு குழுவை ஆரம்பித்து அதிமுக மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என பேசி வருகின்றனர். இதற்கிடையே அதிமுக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என சசிகலாவும், ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் மீண்டும் அறிக்கை வெளியிட்டனர். இதற்கிடையே நேற்று செய்தியாளர்களை சந்தித்த சசிகலா பேசிய பேச்சு தான் தற்போது தமிழக அளவில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.

வழக்கமாக மிகவும் அமைதியாக பேசும் சசிகலா நேற்று ஆவேசத்துடனே பேசினார். எடப்பாடி பழனிச்சாமி கட்சியை அழித்துவிட்டார் இதனால் அதிமுகவில் தான் மீண்டும் என்ட்ரி கொடுக்கப் போகிறேன்.. 2026 இல் அதிமுக ஆட்சி அமைக்கும் என ஆவேசமாக பேசியிருக்கிறார். இது ஏற்கனவே சசிகலா பேசிய பேச்சுகள்தான் என்றாலும் தற்போதைய சூழலில் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் சில முன்னாள் அமைச்சர்கள் சசிகலா தயவால் தான் மீண்டும் கட்சிக்குள்ளேயே வந்தனர். சூழல் இப்படி இருக்க விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்ததும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் சசிகலாவை ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் சந்திப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தான் தற்போது ஹாட் டாபிக்காக இருக்கிறது. முன்னதாகவே சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தள்ளிப்போனது. இந்த நிலையில் நேற்றைய சசிகலாவின் பேச்சும் சில நாட்களுக்கு முன்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கையும் சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு குறித்த தகவல்களை உறுதியாக்கி இருக்கிறது. வரும் நாட்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பார்கள் என்கின்றனர் அவர்களது ஆதரவாளர்கள். அது மட்டுமல்லாமல் அதிமுக தரப்புடனான மறைமுக பேச்சுவார்த்தைகளும் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. சில மூத்த முன்னாள் அமைச்சர்களும் சசிகலாவை சந்திப்பார்கள் என்கின்றனர் அரசியல் கட்சியினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+