துரைப்பாக்கத்தில் ஷாக்! உல்லாசத்துக்கு அழைத்த பெண் கொடூர கொலை! மூளை ப்ரை செய்து சாப்பிட்ட கொலையாளி!
சென்னை: துரைப்பாக்கத்தில் இளம்பெண் ஒருவரின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு சூட்கேசில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், இது திட்டமிடப்பட்ட கொலை என்றும், கொலையில் ஈடுபட்ட நபர், இளம்பெண்ணின் மூளையை வறுத்து சாப்பிட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை துரைப்பாக்கத்தில் குமரன் குடில் 1வது பிரதான சாலை, 3வது குறுக்கு தெரு சந்திப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதன் கட்டுமான பணிகள் வழக்கம்போல நேற்று காலை தொடங்கியிருக்கிறது. வேலைக்கு வந்த பணியாளர்கள், வீட்டின் வாசலில் ரத்த கறையுடன் சூட்கேஸ் ஒன்று இருப்பதை பார்த்து சந்தேகித்துள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டிருக்கிறது. தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது.

அதாவது இந்த சூட்கேசில், பெண் ஒருவரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டு இருந்திருக்கிறது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அருகில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தபோது, நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில், அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் இளம்பெண் உடல் உள்ளடக்கிய சூட்கேசை, புதிதாக கட்டுமானப்பணிகள் நடைபெற்று வரும் வீட்டின் முன்பு வைத்து விட்டு செல்வது தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட இளைஞர் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்துள்ளனர்.
விசாரணையில், துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர், குடில் 1வது பிரதான சாலையில் வசித்து வரும் மணிகண்டன் (26) எனும் இளைஞர்தான் சூட்கேசை வைத்துவிட்டு சென்றது தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து அவரை கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிகண்டன் ஒரு பொறியாளர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த இவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் உள்ள தனது அக்கா வீட்டில் தங்கி வருகிறார். இவருக்கு பாலியல் தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது. அடிக்கடி பாலியல் தொழிலாளர்களுடன் உல்லாசமாக இருந்திருக்கிறார்.
சம்பவம் நடந்த தேதிக்கு, மூன்று நாட்கள் முன்பு, அதாவது கடந்த 16ம் தேதி, இவரது அக்கா, மாமா ஆகியோர் திருவையாறு சென்றிருக்கிறார்கள். இந்த சந்தர்பத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்ட மணிகண்டன், மாதவரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை உல்லாசத்திற்கு அழைத்து வந்திருக்கிறார். மூன்று நாட்கள் தன்னுடன் தங்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் ரூ.18,000 தருவதாகவும் கூறியிருக்கிறார்.
இவர் அழைத்தபடி மூன்று நாட்கள் இளம்பெண் இவருடன் தங்கியிருக்கிறார். ஆனால், மூன்றாவது நாள் அப்பெண் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்றும், எனவே பேசிய பணத்தை கொடுக்கும்படியும் கேட்டிருக்கிறார். மணிகண்டனோ வெறும் ரூ.12,000 மட்டும் கொடுத்து அனுப்ப முயன்றிருக்கிறார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு வெடித்திருக்கிறது.
இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் சுத்தியல் மூலம், இளம்பெண்ணின் மண்டையை உடைத்திருக்கிறார். இதில், இளம்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். பின்னர் அன்றிரவு முழுவதும் சடலத்துடன் இருந்த மணிகண்டன், அடுத்த நாள் பெரிய சூட்கேஸ் ஒன்றை வாங்கி வந்து, இளம்பெண்ணின் உடலை துண்டு துண்டாக வெட்டி, அதில் அடைத்து கட்டுமானம் நடைபெறும் பகுதியில் வீசியிருக்கிறார்.
இந்த சம்பவம் குறித்து அவர் அளித்த வாக்குமூலத்தில், மற்றொரு அதிர்ச்சி செய்தியையும் குறிப்பிட்டிருக்கிறார். அதாவது, இளம்பெண்ணின் மூளையை மட்டும் தனியாக எடுத்து அதை வெங்காயம், தக்காளியுடன் சேர்த்து வதக்கி சாப்பிட்டு இருப்பதாக கூறியுள்ளார். இதை கேட்ட போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications