Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Exclusive: நான் சாதி வெறியன் இல்லை.. அது பொய் வீடியோ! கொமதேக நாமக்கல் வேட்பாளர் சூரியமூர்த்தி பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நான் சாதி வெறி பிடித்தவன் இல்லை என்று நாமக்கல் தொகுதியின் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் சூரியமூர்த்தி கூறியுள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடுவதால் என்னுடைய பெயரை கெடுக்க வேண்டும் என்பதற்காக பொய்யான வீடியோவை தற்போது பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார் சூரியமூர்த்தி.

லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அரசியல் களம் அனலடிக்கிறது. திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு (கொமதேக) நாமக்கல் லோக்சபா தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

It is a fake video Says Suriyamurthy KMDK s candidate in Namakkal

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன், 2019 மக்களவைத் தேர்தலைப் போல, ஒரு தொகுதியில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அதே நாமக்கல் தொகுதியிலேயே இந்த முறையும் போட்டியிடுகிறோம் என்று கூறினார்.

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நாமக்கல் தொகுதியில் போட்டியிட்ட கொமதேக வேட்பாளர் ஏ.கே.பி. சின்ராஜ் 2.65 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். உதயசூரியன் சின்னத்தில் களமிறங்கி வென்றி பெற்று தற்போதைய எம்.பி.யாக இருக்கும் சின்ராசுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைக்கவில்லை.

கடந்த முறை வெற்றி பெற்றதைக் கருத்தில் கொண்டு 2024 லோக்சபா தேர்தலிலும் கொமதேக இந்தத் தொகுதியைப் பெற்றிருக்கினது. இதற்கான ஒப்பந்தம் பிப்ரவரி 24ஆம் தேதி கையெழுத்தானது. இந்நிலையில், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளராக சூர்யமூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கொடுமுடி தாலுகாவைச் சேர்ந்த கொமதேக மாநில இளைஞரணி செயலாளர் எஸ்.சூரியமூர்த்தி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 1992ஆம் ஆண்டு முதல் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் கடந்த 2001ஆம் ஆண்டு மொடக்குறிச்சி சட்டசபைத் தொகுதியிலும், 2006ஆம் ஆண்டு வெள்ளக்கோயில் சட்டப்பேரவை தொகுதியிலும் சுயேச்சையா போட்டியிட்டு தோல்வி அடைந்தார்,

கடந்த 2007ஆம் ஆண்டு முதல் கொமதேகவில் தலைமை நிலையச் செயலாளர் மற்றும் மாநில இளைஞரணி செயலாளராக உள்ளார். கடந்த 2016ஆம் ஆண்டு மொடக்குறிச்சி தொகுதியில் கொமதேக சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நாமக்கல் தொகுதியில் கொமதேக சார்பில் வேட்பாளராக களமிறங்குகிறார் சூரிய மூர்த்தி. அவரது வீடியோ ஒன்று சமீபத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தாழ்த்தப்பட்ட சாதிக்காரன் கவுண்டர் வீட்டுப் பெண்ணைக் காதலித்து மணம் முடிக்க நினைத்தால் அவனுடைய தாயின் கருவில் வளரும்போது தாயோடு கருவறுப்போம்" என்று சுயசாதிவெறியுடன் பேசிய சமூகவிரோதி சூரிய மூர்த்தியை கொ.ம.தே.க சார்பில் நாமக்கல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அறிவித்திருப்பதை சமூகநீதிக் காவலர்களாகச் சொல்லிக்கொள்ளும் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பரிசீலிக்க வேண்டும். பகுத்தறிவும் சுயமரியாதையும் உள்ளவர்களால் எவ்வாறு இத்தகைய சாதி வெறியர்களுக்காக வேலை செய்ய முடியும்.

திட்டமிட்டே தலித்துகளுக்கு எதிராகச் செயல்படுகின்ற சாதி சங்கங்கள் தொடர்ந்து இவ்வாறு அமைதியைச் சீர்குலைக்கும் விதத்தில் பேசுவதைப் பிற கட்சிகள் கண்டுகொள்ளாவிட்டாலும் பெரியாரின் கொள்கையைக் கடைபிடிப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு கட்சி அறத்தோடு செயல்படுவதுதான் சமூகநீதிக்கு அழகு. அந்த வகையினில் சூரிய மூர்த்திக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பு நிச்சயம் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த நிலையில் நாமக்கல் லோக்சபா தொகுதி வேட்பாளர் சூர்ய மூர்த்தியிடம் ஒன் இந்தியா சார்பில் சில கேள்விகள் முன் வைக்கப்பட்டன. உங்களுடைய பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. எங்கள் சாதி பெண்களை காதலித்து திருமணம் செய்ய நினைக்கும் மாற்று சாதி இளைஞர்களை கருவறுப்போம் என்று வெளிப்படையாக பேசிய வீடியோ தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

காதலிப்பது கலாச்சார சீரழிவு. கவுண்டர் இன பெண்கள் வேறு இன ஆண்களை காதலித்தால் வெட்டுவோம் என்று பேசிய வீடியோ அதிகம் பகிரப்படுகிறது அது பற்றி உங்க கருத்து என்ன என்று நமது ஒன் இந்தியா அரசியல் நெறியாளர் ஜெகதீஷ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சூரிய மூர்த்தி அது டிஆர்பிக்காக பரவி வருகிறது என்று கூறினார்.

சூரிய மூர்த்தியின் வீடியோ பேச்சு பற்றி கூறிய ஜெகதீஷ், அறுத்து போடுவதற்கு கவுண்டர் இன இளைஞர்கள் தயாராக இருக்கிறார்கள். கவுண்டர் ஜெயிலுக்கு வரமாட்டார் என்று நினைக்காதீர்கள். எங்க ஜாதி பசங்க கல்யாணம் ஆகாமல் இருக்கும் போது கவுண்டர் இன பெண்களை நீங்கள் கூட்டிக்கொண்டு போவதா என்று கேள்வி எழுப்பினார் ஜெகதீஷ்.

அதற்கு மறுப்பு தெரிவித்த சூரிய மூர்த்தி அது பொய்யான வீடியோ.. என் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அது பொய்யான வீடியோ என்று உறுதி செய்யப்பட்டு டோட்டலாக விடுதலையாகி விட்டது என்று சொன்னார் சூரிய மூர்த்தி.

கவுண்டர் இன பெண்கள் யாரும் காதலிக்க நினைக்காதீர்கள் என்று நீங்கள் பேசியிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு பதில் சொன்ன சூரிய மூர்த்தி, அது பொய்யான தகவல், நான் பேசவில்லை. வேட்பாளராக நிற்பதால் மீண்டும் அதை பரப்புகின்றனர் என்றார். அப்படி நான் பேசவே இல்லை என்று உறுதியாக சொன்னார் சூரிய குமார்.

நான் வேட்பாளராக நிற்பதால் எதிர் கட்சியினர் தோல்வி பயத்தில் வீடியோவை பரப்புகின்றனர். நான் சாதி வெறி பிடித்தவன் இல்லை. நான் அரசியலில் இருக்கிறேன். காதல் எல்லாம் பெரிய விசயமில்லை என்றார்.

கவுண்டர் இன பெண்களை பட்டியல் இன ஆண்கள் காதலிக்கலாமா என்று கேள்வி எழுப்பியதற்கு சிரித்துக்கொண்டே காதல் எல்லாம் புராண காலத்தில் இருந்தே இருக்கிறது என்று சொல்லி சிரித்தார் சூரிய மூர்த்தி. கொமதேக வேட்பாளர் மாற்றப்படுவாரா? அல்லது சூர்யமூர்த்தி போட்டியிட்டு வெற்றியை தக்க வைக்கபாரா பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+