முதல்வர் ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. அப்போ ஆரம்பிச்ச பிரச்னை.. இனி பாஜக அவ்ளோதான்: ஆர்.எஸ்.பாரதி பரபர!
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அவரது பிறந்தநாளன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் "பிரதமராக யார் வரக்கூடாது என்பதே முக்கியம்" என்று பேசிய பிறகு தான் திமுகவுக்கு நெருக்கடி தரப்பட்டு வருகிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 7 மணி முதல் 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு பொன்முடி வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல, விழுப்புரத்தில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டிலும், அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளே விடாத அதிகாரிகள்: சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினரின் சோதனை நடைபெற்று வரும் நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பொன்முடி வீட்டுக்கு வருகை வந்தனர்.சோதனை நடைபெறும் பொன்முடி இல்லத்திற்கு சென்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, "அமைச்சர் பொன்முடியை சந்திக்க எங்களை அனுமதிக்கவில்லை. பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னை அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை. எதற்காக இந்த சோதனை என்பதை தெரிந்துகொள்ளும் உரிமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது. அமலாக்கத்துறை வழக்குகளில் இதுவரை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதா?
ஸ்டாலின் பேசிய பிறகுதான் நெருக்கடி: மத்திய பாஜக அரசின் ஆட்சி முடிவுக்கான கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. பாஜக இதுபோன்று தொடர்ந்து செய்தால், கர்நாடகாவில் பாஜகவுக்கு ஏற்பட்ட நிலைதான் நாடு முழுவதும் ஏற்படும். கர்நாடகாவில் பாஜகவுக்கு என்ன ஏற்பட்டதோ, அதுவே காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நடக்கும்.
திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது பிறந்தநாளன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமராக யார் வரக்கூடாது என்பதே முக்கியம் என்று கருத்து தெரிவித்ததற்கு பின்னர் தான் திமுகவுக்கு அதிக நெருக்கடி தரப்பட்டு வருகிறது.
ஆளுநர் மற்றும் அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு மத்திய பாஜக அரசு நெருக்கடி கொடுக்கிறது.

அன்றும், இன்றும்: அமலாக்கத்துறை தொடர்ந்த எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, பொன்முடியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு இன்று நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள்.
பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்ற போது அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது. இன்று பெங்களூரில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை அகில இந்திய பிரச்சனை" எனத் தெரிவித்தார்.
-
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
காலையிலேயே படையெடுத்த அமலாக்கத்துறை.. திக்குமுக்காடிய பினராயி விஜயன்.. கேரளாவை அதிரவைத்த ரெய்டு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications