நான் தான் மோடி என அண்ணாமலை சொல்லிட போறார்..அதெல்லாம் வெறும் டிராமா.. திருநாவுக்கரசர் எம்.பி அட்டாக்
சென்னை: அண்ணாமலை திடீரென்று நான் தான் மோடி, அமித்ஷா என்று சொல்லிவிட போகிறார். அண்ணாமலை எதிர்க்கட்சியையே மிரட்டிக் கொண்டு இருக்கிறார். அவர்களிடம் சண்டை போடும் அதிமுகவை மறைமுகமாக மிரட்ட மாட்டாரா என்று திருநாவுக்கரசர் எம்.பி விமர்சித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டி ஒன்றின் போது, தோசை சுடுவதற்கோ இட்லி சுடுவதற்கோ நான் இங்கு வரவில்லை.
தமிழகத்தில் ஒரு தோசையை சுட்டுகிட்டு, இட்லியை சுட்டுக்கிட்டு, பாஜகவின் மேனேஜராக உட்கார்ந்து சீட்டை தேய்ச்சிகிட்டு அப்படியே சைட்ல போய்கிட்டு இருக்க வரலை, அண்ணாமலை இங்கு தலைவராக வந்திருக்கேன். தலைவராக இருப்பவன் தலைவராகத்தான் முடிவுகளை எடுப்பான்.

வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது
லட்சக்கணக்கான தொண்டர்களின் தலைவன் நான். கட்சி வளர்ச்சிக்கு எந்த முடிவு எடுக்க வேண்டுமோ? துணிந்து எடுத்துக் கொண்டே இருப்பேன். வரும் காலத்தில் இன்னும் வேகம் அதிகரிக்குமே தவிர குறையாது. விலகி சென்று விவசாயம் பண்ண போவதில்லை. இன்னொரு தலைவன் கீழ போய் உக்காந்து அந்த தலைவன் வாழ்க என கோஷம் தான் போட போகிறார்கள்.

முடிவுகள் அதிரடியாக தான் இருக்கும்
ஜெயலலிதாவின் முடிவுகள் எப்படி இருக்குமோ அப்படித்தான் எனது முடிவுகளும் அதிரடியாக இருக்கும். இதில் பயம், ஒருவருக்கு சார்ந்து பேசுதல், பின்னாடி போய் கைகட்டி பேசுவது இதெல்லாம் கிடையாது. நான் ஒரு தலைவன், தலைவன் தலைவனுக்கு தகுந்த மாதிரிதான் முடிவுகளை எடுப்பான். இதில் பாரபட்சம் கிடையாது. அதிமுகவிலிருந்து நிறைய முன்னாள் அமைச்சர்கள் திமுகவில் இணைந்த போது ஜெயலலிதா மீதும் இதே குற்றச்சாட்டை வைத்திருக்கலாமே.

நானும் அதுபோன்ற தலைவர் தான்
ஏன் இது போன்ற அதிரடி முடிவுகளை கருணாநிதி எடுத்ததில்லையா, அவர்கள் எல்லாம் தலைவர்கள். அவர்கள் முடிவெடுத்தால் 4 பேர் கோபப்பட்டுக் கொண்டு வெளியே வரத்தான் செய்வார்கள். நானும் அது போன்ற ஒரு தலைவர்தான்" என்று பேசியிருந்தார். அண்ணாமலையின் இந்த பேச்சு அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பாஜகவின் கூட்டணி கட்சியான அதிமுகவும் தங்கள் தலைவரைப் பற்றிய இந்த பேச்சால் எரிச்சல் அடைந்து விமர்சனங்களை முன்வைத்தது.

திருநாவுக்கரசர் விமர்சனம்
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் திருச்சி தொகுதி எம்.பியுமான திருநாவுக்கரசர் அண்னாமலையை மன ரீதியாக பண்ணட்டும் என்று விமர்சித்துள்ளார். இது தொடர்பாக திருநாவுக்கரசர் கூறியதாவது:- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தான் எம்.ஜி.ஆர் மாதிரி, கருணாநிதி மாதிரி, ஜெயலலிதா மாதிரி என பேசினால்..ஏதோ பாவம்..அவர் மன ரீதியாக தியனம் பண்ணட்டும். திடீரென்று நான் தான் மோடி, அமித்ஷா என்று சொல்லிவிட போகிறார். நான் தான் வாஜ்பாய் என்று சொல்லிவிட போகிறார்.

சண்டை போடுவது போல் நாடகம்
அண்ணாமலை எதிர்க்கட்சியையே மிரட்டிக் கொண்டு இருக்கிறார். அவர்களிடம் சண்டை போடும் அதிமுகவை மறைமுகமாக மிரட்ட மாட்டாரா.. அதிமுகவும் அவ்வளவு சீக்கிரமாக இவுங்களை (பாஜக) விட்டு போக முடியாது.. பாஜகவும் அவ்வளவு சீக்கிரமாக போகாது. இப்படியே சண்டை போடுவது போல நாடகம் நடத்திக் கொண்டு இருப்பார்கள். இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் சார்ந்து இருப்பது ஒருவரை ஒருவர் பாதிக்கிறது என்று இரண்டு பேருக்குமே தெரியும். பாஜகவை சார்ந்து இருப்பதால் நமக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்பது அதிமுகவிற்கு தெரிகிறது. அதனால் விட்டுவிட்டுப் போகவும் முடியவில்லை. எனவே சண்டை போடுற மாதிரி ஒரு டிராமாவை அவர்கள் நடத்துகிறார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications