இனிமே குற்றம் இல்லை.. வருமான வரித் தாக்கல் செய்பவர்களுக்கு மிகப்பெரிய நிம்மதி.. நிர்மலா சிக்ஸர்!
சென்னை: தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
வருமான வரிக்கான ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யும் இறுதி நாள் நெருங்கி வருகிறது. ஏற்கனவே இதற்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கு பணம் வந்துவிட்டது. தவறான வருமான வரி கணக்கு மற்றும் விலங்குகளை பெறும் வகையில் வருமான வரிக் கணக்கு ரிட்டர்னை தாக்கல் செய்ய கூடாது என்று வரி செலுத்துவோருக்கு வருமான வரித்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. வருமான தாக்கலில் தவறான தகவல்களை கொடுக்க கூடாது என்று மத்திய நிதித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய நடத்தை மிக தவறானது. கடுமையான விளைவுகளை பணியாளர்கள் இதன் மூலம் சந்திக்க நேரிடும். இது பெரிய அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைக்கு கூட வழிவகுக்கும் நிலை இருந்தது. இதில் முறைகேடுகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட்டு வந்தது.
வருமான வரித் தாக்கல்: இந்த நிலையில்தான் தற்போது தாமதமான வருமான வரித் தாக்கல் இனி கிரிமினல் குற்றம் இல்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதை கிரிமினல் குற்றமாக கருதமுடியாது.
வருமான வரி: ஏற்கனவே குறித்த நேரத்தில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பலருக்கும் ரிட்டர்ன்ஸ் கிடைத்துவிட்டது. பலருக்கும் அவர்களின் வங்கி கணக்கில் பணம் போடப்பட்டு வருகிறது. ஆனால் சிலருக்கும் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தும் இன்னும் ரீ பண்ட் கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் விளக்கப்பட்டு உள்ளன.
முதலாவதாக, வருமான வரி ரிட்டன் (ITR) படிவத்தில் உள்ள தவறான அல்லது முழுமையடையாத தகவலே கொடுக்கப்பட்டு இருந்தால் அதுவே வரி திரும்பப் பெறாமல் இருப்பதற்கான முக்கிய காரணமாக இருக்கும்.வங்கி விவரங்கள், குடியிருப்பு முகவரி அல்லது மின்னஞ்சல் ஐடி ஆகியவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், உங்கள் வரி திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படலாம். எனவே, உங்கள் ஐடிஆர் தாக்கல் செய்யும் போது வழங்கப்பட்ட தகவல்களின் துல்லியத்தை உறுதி செய்வது மிகவும் முக்கியம்.
இதில் கிட்டத்தட்ட 31 லட்சம் பேர் ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்துவிட்டு அதை இ வெரிஃபிகேஷன் செய்யாமல் விட்டுள்ளனர். ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்த பின் அதை வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். ஆனால் இவர்கள் செய்யவில்லை. இதனால் இவர்களுக்கு இன்னும் பணம் அனுப்பப்படவில்லை. இதையடுத்து இவர்கள் உடனடியாக தங்கள் இ வெரிஃபிகேஷனை செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்யப்படும். இல்லையென்றால் இதில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முறையாக தாக்கல்ஸ் செய்து இ வெரிஃபிகேஷன் செய்தவர்களுக்கு ஏற்கனவே ரி பண்ட் சென்றுவிட்டது.
வருமானத்தில் வரி செலுத்துவோரின் கோரிக்கைகளை நிரூபிக்கும் விதமாக சில கூடுதல் ஆவணங்கள் வரி அதிகாரிக்கு தேவைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீங்கள் லோன் இருக்கிறது என்று சொல்கிறீர்கள்.. ஆனால் உங்கள் கணக்கில் வீட்டு லோனிற்கான ஆதாரங்கள் இல்லையென்றால் அதற்கான ஆதாரங்கள் உங்களிடம் கேட்கப்படும். இதுபோன்ற சமயங்களில், வரி செலுத்துபவருக்கு இவற்றை வழங்குமாறு வரி அலுவலர் கோரிக்கைகளை அனுப்புவார். இவை வரி அதிகாரியால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவுடன், ரிட்டர்ன் தரப்படும்.
இந்தியாவில் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்தவர்களின் கிட்டத்தட்ட 31 லட்சம் பேருக்கு பணம் அனுப்பப்படவில்லை இவர்கள் உடனடியாக இ வெரிஃபிகேஷன் செய்ய வேண்டும். வேறு காரணங்களுக்காக கணக்கில் பணம் பெறாதவர்கள் உடனடியாக அந்த தவறுகளை சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் ஐடி ரிட்டர்ன்ஸ் அவர்களுக்கு நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications