Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கர்மா.. அதிமுகவை ரெண்டாக்கிய பாஜக.. இப்போ ’கத்தி’ திரும்பிருச்சு! அண்ணாமலைக்கு எதிராக புரட்சி படை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிமுகவில் பல்வேறு விவகாரங்களில் தலையிட்ட பாஜக தற்போது அதே பிரச்சனையில் சிக்கி தவிக்கிறது. தேர்தல் கூட்டணி தொடர்பாக தமிழிசை அண்ணாமலை என இரண்டு அணிகள் உருவாகி இருக்கும் நிலையில் பல மூத்த தலைவர்கள் அண்ணாமலைக்கு எதிராக மத்திய தலைமையிடம் புகார் கூறியிருப்பதாக கூறப்படுகிறது.

தேர்தலில் தமிழகத்தைப் பொறுத்தவரை நான்கு முனை போட்டி எழுதிய நிலையில் தற்போது திமுக கூட்டணி பெருவெற்றி பெற்றிருக்கிறது. அந்த கூட்டணி 40க்கு 40 என தமிழகம் புதுவை தொகுதிகளில் வெற்றி பெற்றது

It is reported that two teams have been formed in Tamilnadu BJP as Tamilisai - Annamalai


இந்த கூட்டணி தவிர்த்து.. அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை மக்களவைத் தேர்தலில் களம் கண்டன. இந்த இரண்டு கூட்டணிகளும், நாம் தமிழர் கட்சியுமே தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முழுமையாக திமுக கூட்டணி தமிழக எதிர்க் கட்சிகளை ஸ்வைப் செய்திருக்கும் நிலையில் தாங்கள் தான் அதிக வாக்குகளை பெற்றிருக்கிறோம் கடந்த ஆண்டுகளில் இருந்ததைவிட தற்போது வாக்கு சதவீதம் அதிகரித்து இருக்கிறது என அரசியல் கட்சிகள் கூறி வருகின்றனர். குறிப்பாக பாஜகவின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறும் என அண்ணாமலை குறியுள்ளார். தற்போதுள்ள 11 சதவீத வாக்கு வங்கி மேலும் அதிகரிக்கும் என கூறி வருகிறார்.

வாக்கு சதவீதம் தொடர்பாக அண்ணாமலை பேசி வரும் நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி முறிந்தது அண்ணாமலையால் தான் அதனால் தான் பாஜக படுதோல்வியை சந்தித்தது என சமூக வலைதளங்களில் பாஜகவினர் விமர்சித்து வருகின்றனர். அதிமுக பாஜக பாமக தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய கூட்டணி உருவாகி இருந்தால் பெரிய அளவிலான வெற்றி கிடைத்திருக்கும் குறைந்தது 5 நாடாளுமன்ற உறுப்பினர்களை யாவது பெற்றிருக்கலாம் என பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அண்ணாமலை மீது பல பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களும் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் கோவை மாவட்ட செயலாளருமான எஸ்பி வேலுமணி அதிமுக பாஜக கூட்டணி உடைவதற்கு காரணம் அண்ணாமலை தான் என்றும் அண்ணாமலை அதிமுகவினரையே விமர்சித்தார்.. கட்சியின் மூத்த தலைவர்களை விமர்சித்தார். இதன் காரணமாக கூட்டணி அமையாமல் போனது இதனால் தான் பாஜக கடும் தோல்வியை சந்தித்தது என கூறியிருந்தார். அவரது கருத்தை தமிழிசை சௌந்தர்ராஜன் வரவேற்று பேசியிருந்தார். இதனால் அதிமுக பாஜக கூட்டணி முடிவுக்கு காரணம் அண்ணாமலை தான் எனவும் வாக்கு சதவீதங்களை வைத்து அண்ணாமலை தலைமையை ஏமாற்றி வருகிறார் என்கின்றனர் பாஜகவினர்.

இந்நிலையில் அண்ணாமலையை பல பாஜக மூத்த தலைவர்களை விமர்சித்து வருகின்றனர். ஏற்கனவே அண்ணாமலை மீது பல நிர்வாகிகள் அதிருப்தியிலும் இருக்கின்றனர். அந்த கட்சியின் மிகப் பிரபலமாக இருந்த காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து வெளியேறி அதிமுகவில் சேர்ந்தார். மேலும் எஸ்வி சேகர் உள்ளிட்ட சிலரும் தற்போது வரை அண்ணாமலையை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே அண்ணாமலை பாஜக தலைமையை ஏமாற்றி வருவதாக பகீர் கிளப்பி இருக்கிறார் அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கல்யாண ராமன். இவர் இஸ்லாம் குறித்து அவதூறாக பேசி 160 நாட்கள் சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில்,”தமிழிசை மற்றும் எஸ்.பி.வேலுமணி இருவரும் கூறியது சரிதான். அண்ணாமலை வழக்கம் போல் மத்திய தலைமையை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார். 2014 தேர்தலை விட இப்போது பிஜேபி குறைந்த வாக்குகளைப் பெற்றுள்ளது என்பது ஒரு அப்பட்டமான உண்மை, அதுவும் 18.8% லிருந்து 18.2% ஆக உள்ளது." என கூறியிருந்தார். இதனையடுத்து அவரது பதிவில் அண்ணாமலை ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கிடையே பாஜக பிரமுகரான எஸ்வி சேகர், பட்டாசு வெடித்து கொண்டாடிய வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் பாஜகவுக்குள்ளேயே அண்ணாமலை எதிர்ப்பு அணி உருவாகியுள்ளதாகவும், அவர் குறித்து தலைமக்கும் புகார் பறந்துள்ளதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+