வாங்க பங்காளிகளா வாக்களிக்கலாம்... நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது
சென்னை: நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது என்று தேர்தல் ஆணையம் விளம்பரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டாம் கட்டமாக நாளை தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. இளம்தலைமுறை வாக்காளர்களை கவருவதற்காகவும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பிரபல நடிகர்களின் வசனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சமீபத்தில், வெளியாகி வெற்றி வாகை சூடிய நடிகர் அஜித்குமாரின் படமான விஸ்வாசம் படத்தின் தலைப்பை பயன்படுத்தி, அதில், ஜனநாயகத்தின் விஸ்வாசம் வாக்களிப்பதே என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதே போல், நடிகர் விஜய்யின் படமான சர்கார் பட பாணியில், 49- பி சட்டபிரிவு குறித்தும் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. அதற்காக, உங்கள் வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதனை நீங்கள் தேர்தல் அதிகாரியிடம் தெரிவுபடுத்தி, அவரின் கேள்விகளுக்கு தக்க பதிலளித்து, வாக்குச் சீட்டு மூலம் உங்கள் வாக்கை பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17B-யில் உங்கள் பெயரை பதிவிடவும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
வாக்களித்து நம் தேசத்திற்கு விஸ்வாசமாய் இருக்கும் நேரமிது! #MakeYourMarkTN #GoVoteTN #ECI #LokSabhaElections2019 #Viswasam @directorsiva @SureshChandraa pic.twitter.com/pfIMwujvvL
— TN Elections CEO (@TNelectionsCEO) April 17, 2019
நாளைய சர்காரை அமைப்பது, வாக்காளர்களின் கையில் இருப்பதால் ஓட்டே துணை என்றும், பிரபல ஹாலிட் படங்களின் ஸ்டைலிலும் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. நாளைக்கு நாம் என்ன பண்ணப் போறோம், ஓட்டு போட போறோம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications