ஐடி ஊழியர்களுக்கு பேரதிர்ச்சி.. கொத்து கொத்தாக வீட்டுக்கு அனுப்பும் நிறுவனங்களின் லிஸ்ட் இதோ
சென்னை: தற்போது ஐடி துறை ஆட்டம் காண்கிறது. ஏஐ எனும் செயற்கை தொழில்நுட்பங்களின் வருகையால் ஊழியர்கள் கொத்து கொத்தாக பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் ஐடி ஊழியர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். எப்போது வேலை பறிபோகுமோ? என்ற பயத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் ஊழியர்களை அடுத்தடுத்து பணி நீக்கம் செய்து வரும் 7 நிறுவனங்கள் பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது உலகளவில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. ஐடி, பத்திரிகை உள்பட பல துறைகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்பட தொடங்கி உள்ளது. ஏஐ-யை பயன்படுத்துவதன் மூலமாக பணி விரைவாக நடப்பதோடு, செலவும் குறைகிறது. இதனால் பல நிறுவனங்கள் அதனை பயன்படுத்துவதை அதிகரித்து வருகின்றன.

இதன் காரணமாக ஊழியர்கள் தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஏஐ-யால் ஐடி துறையில் பல ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் நம் நாட்டில் மட்டும் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பணியாளர்கள் வேலையை இழக்கலாம் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்நிலையில் தான் எந்தெந்த நிறுவனங்கள் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்? அதன் பின்னணி என்ன?, 2025ம் ஆண்டில் கடந்த 10 மாதங்களில் எந்தெந்த நிறுவனங்கள் பணி நீக்கம் செய்வதை அதிகரிக்க என்ன காரணம்? என்பது பற்றி இங்கு பார்க்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனம்
டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தற்போது 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. தற்போது உலகளவில் 6 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இன்னும் 6 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவை அதிகமாக பயன்படுத்த டிசிஎஸ் முடிவு செய்துள்ளது. அதன் ஒரு பகுதியாக பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அக்சென்ச்சர்
அக்சென்ச்சர் ஐடி நிறுவனம் கடந்த மாதம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டடது. அதன்படி நிறுவனத்தில் இருந்து 11 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. செலவை குறைப்பது, ஏஐ பயன்பாட்டை அதிகரிப்பது உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பணி நீக்கம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாப்ட்
மைக்ரோசாப்ட் நிறுவனம் 2025ம் ஆண்டில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இதில் 2 ஆயிரம் பேர் பெர்மாமன்ஸ் சரியில்லை என்று பணியை இழந்தனர். மற்றவர்கள் ஏஐ பயன்பாடு, நிர்வாக காரணங்களால் பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.
இதுபற்றி மைக்ரோசாப்ட்டின் சிஇஓ சத்ய நாதெல்லா, நிறுவனத்தின் வளர்ச்சி, நிர்வாக மேம்பாடு, நிர்வாக மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
கூகுள்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு கூகுள் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உலகளவில் அதிகளவில் மக்கள் பயன்படுத்தும் சர்ச் என்ஜினாக கூகுள் உள்ளது. இந்நிலையில் தான் கூகுள் நிறுவனம் முதற்கட்டமாக டிசைன் சார்ந்த பிரிவில் பணியாற்றும் 100 பேரை பணியில் இருந்து நீக்கி உள்ளது. வரும் நாட்களில் இந்த பணி நீக்க நடவடிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
அமேசான்
அமேசான் என்பது அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனமாகும். இ-காமர்ஸ் துறையில் முன்னணி நிறுவனமாக அமேசான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அமேசான் தனது நிறுவனத்தில் எச்ஆர் பிரிவு உள்பட பிற பிரிவுகளில் பணியாற்றும் ஊழியர்களில் 15 சதவீதம் பேரை நீக்க திட்டமிட்டுள்ளது.
சேல்ஸ் போர்ஸ்
அதேபோல் மற்றொரு ஐடி நிறுவனமான சேல்ஸ்போர்ஸ் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. சேல்ஸ்போர்ஸ் நிறுவனத்தின் சிஇஓ மார்க் பெனிஆஃப் 4 ஆயிரம் பணியாளர்களை பணி நீக்கம் செய்துள்ளார். கஸ்டமர் சப்போர்ட் ரோலில் இவர்கள் பணியாற்றி வந்தனர். மொத்தம் 9 ஆயிரம் பேர் இந்த பிரிவில் பணியாற்றி வந்தனர்.
தற்போது 4 ஆயிரம் பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் இன்னும் 5 ஆயிரம் பேர் பணியில் உள்ளனர். இந்த பிரிவில் ஊழியர்களுக்கு பதில் ஏஐ பயன்பாடு கொண்டு வரப்பட்டதால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மற்றவர்களும் அச்சத்தில் உள்ளனர்.
நெஸ்லே
நெஸ்லே என்பது ஸ்விட்சர்லாந்தை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் உணவு நிறுவனமாகும். இந்த நிறுவனம் ஆட்டோமேஷனை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி அடுத்த 2 ஆண்டுக்குள் 16 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. அதாவது மொத்த பணியாளர்களில் இது 6 சதவீதமாகும்.
நெஸ்லே நிறுவனத்தின் சிஇஓவாக பிலிப் நவ்ராதில் பொறுப்பேற்று செயல்பட்டு வரும் நிலையில் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதனால் நெஸ்லே நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications