பூர்விகா மொபைல்ஸ் நிறுவன உரிமையாளர் வீட்டில் ஐடி ரெய்டு! 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 3 இடங்களில் சுமார் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனையில் முன்னணி வகிக்கும் நிறுவனம் பூர்விகா மொபைல்ஸ். தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் பூர்விகா நிறுவனத்தின் கடைகள் உள்ளன. இந்த நிலையில், தான் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் இன்று காலை முதலே ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.

வரி ஏய்ப்பு புகாரில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கம் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் யுவராஜ் வீடு மற்றும் அவருக்கு சொந்தமாக உள்ள பள்ளிக்கரணை மற்றும் பல்லாவரத்தில் உள்ள இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இரண்டு கார்களில் வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை 7 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மூன்று இடங்களிலும் சேர்த்து 15 க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. சோதனையின் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில், வருமான வரித்துறை சோதனை விரிவு அடையும் என எதிபார்க்கப்படுகிறது. சோதனைக்கு பிறகே எவ்வளவு வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதல் கட்டமாக தற்போது 3 இடங்களில் சுமார் 15க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் பூர்விகா நிறுவனத்தின கிளைகளிலும் சோதனை நடத்த வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இன்று காலை முதல் பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் நடைபெறும் இந்த சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications