வரி ஏய்ப்பு புகார் தமிழகத்தில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 2ஆவது நாளாக இன்றும் ஐடி ரெய்டு
சென்னை: தமிழகத்தில் ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தப்படுகிறது.
Recommended Video
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனம் சார்பில் பரிசோதனை கூடங்களும் ஸ்கேன் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனத்தில் குறைந்த செலவில் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
இது தொடர்பான விளம்பரங்களும் வந்துள்ளன. இந்த நிலையில் சென்னையில் உள்ள 13 மையங்கள் உள்பட தமிழகத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித் துறையினர் அதிரடி சோதனையை நடத்தினர்.

வடபழனி
சென்னை வடபழனியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன்ஸ் கார்பரேட் அலுவலகங்களில் நேற்று காலை முதலே வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த மையங்களின் மருத்துவர்கள், நிர்வாகிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அது போல் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, கொல்கத்தா உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்றது.

வரி ஏய்ப்பு
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அரசுக்கு செலுத்த வேண்டிய வருமான வரியை செலுத்தாததால் வரி ஏய்ப்பு புகார் அளிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியில் ஆர்த்தி ஸ்கேன் மையத்தின் உரிமையாளர் கோவிந்தராஜன் வீட்டுக்கு வந்து அவரது மனைவி மருத்துவர் கோமதியிடம் வருமான வரித் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இரண்டாவது நாள்
இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்றும் ஆர்த்தி ஸ்கேன்ஸ் மையங்களில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனைகளில் 15 அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் ஸ்கேன், மருத்துவ பரிசோதனை செய்ய வரும் நோயாளிகளுக்கு இடையூறு ஏதுமின்றி இந்த வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது.

நோயாளிகள்
அதே வேளையில் நோயாளிகள் பணம் செலுத்தும் இடங்களை கண்காணிக்க ஒரு அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோரிடம் கிடுக்கிப்பிடி விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது. எத்தனை கோடி ரூபாய் வரி ஏய்ப்பு, ஏதேனும் ஆவணங்கள் சிக்கியதா என்பது குறித்து சோதனையின் முடிவில் தெரியவரும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications