சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உள்ளே புகுந்த 20+ கார்கள்.. எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் தொடர் ரெய்டு.. அந்த புகார்தான் காரணமா?

Google Oneindia Tamil News

சென்னை: திமுக எம்.எல்.ஏ., எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை செய்து வருகிறது.

Recommended Video

    திருவண்ணாமலை: 2வது நாளாக நீடிக்கும் அதிரடி ரெய்டு... பிரச்சாரத்தை ரத்து செய்த எ.வ. வேலு!

    தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தவிர்க்கவும், முறைகேட்டை தடுக்கவும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

    இந்த நிலையில் திமுக எம்.எல்.ஏ., எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.

    ரெய்டு

    ரெய்டு

    சென்னை, திருவண்ணாமலை உட்பட 18 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்யப்பட்டு வருகிறது. திமுக சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் எ.வ.வேலு போட்டியிடுகிறார். இதற்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தார். ஏ.வ வேலு பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கும் போதே இந்த ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது.

    சோதனை

    சோதனை

    நேற்று காலை சோதனை தொடங்கிய நிலையில் இப்போதுவரை முடியாமல் சோதனை நடந்து வருகிறது. இரவில் சின்ன பிரேக் எடுக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலையே மீண்டும் சோதனை தொடங்கியது. எ.வ.வேலுக்கு சொந்தமான வீடு, பண்ணை வீடு, உறவினர்கள் வீடு, கல்லூரி, கல்லூரி ஹாஸ்ட்டல், அறக்கட்டளை, பள்ளிகளிலும் சோதனை நடந்தது.

    பிரச்சாரம்

    பிரச்சாரம்

    திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் செய்ய நேற்று சென்று இருந்தார். அப்போது அங்கு ரெய்டு நடக்கிறது. ஸ்டாலின் தங்கிய எ.வ.வேலுக்கு சொந்தமான கல்லூரியிலும் நேற்று சோதனை நடந்தது. இன்றும் அங்கு சோதனை நீடிக்கிறது.

    20+ கார்கள்

    20+ கார்கள்

    இன்று அதிகாலையே 20+ கார்களில் வந்த அதிகாரிகள் எ.வ.வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருகிறார்கள். தேர்தலில் பணப்பட்டுவாடா நடக்க முயற்சி நடப்பதாக அளிக்கப்பட்ட புகார் காரணமாகவே வருமானவரித்துறை சோதனை செய்ததாக தகவல்கள் வருகிறது. இந்த சோதனையில் ஆவணங்கள் ஏதாவது கைப்பற்றப்பட்டதா என்ற விவரம் வெளியாகவில்லை .

    English summary
    IT Raid in E V Velu residents and properties for the second day in Tamilnadu.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X