வரி ஏய்ப்பு.. சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் வருமான வரித்துறை அதிரடி ரெய்து
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஸ்ரீபெரும்புதூரில் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு புகார்கள் வந்ததை அடுத்து சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் 30க்கும் மேற்பட்ட இடங்களில் 3 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். செந்தில் பாலாஜியின் முன்னாள் உதவியாளர் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

இன்றைய தினம் ஸ்ரீபெரும்புதூர், சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். வரி ஏய்ப்பு தொடர்பான புகாரினை அடுத்து வருமான வரி சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications