ஓசூரில் அதிர்ச்சி! வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பாத மாணவி.. 15 நாள் ஆகியும் போலீசார் அலட்சியம்?

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தொழிற்கல்வி பயின்று வந்த மாணவியை கடந்த 10 ஆம் தேதி முதல் காணவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையில் புகாரளித்தும் போலீசார், பாதிக்கப்பட்ட பெற்றோரை அலைக்கழிப்பதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

கிருஷ்னகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பகுதியை சேர்ந்தவர் அப்பாச்சி ராஜா. இவருடைய மனைவி விமலா. இந்த தம்பதிக்கு பாவனா என்ற மகள் உள்ளார். 15 வயதே ஆன சிறுமி பாவனா 10 ஆம் வகுப்பு முடித்துவிட்டு அங்குள்ள ஐடிஐ கல்லூரி ஒன்றில் பயின்று வருகிறார். கடந்த 10 ஆம் தேதி வழக்கம் போல ஐடிஐ வகுப்புக்கு சென்ற மாணவி பாவனா, மாலை 5 மணியளவில் தனது தாயாரை தொடர்பு கொண்டு பேருந்துக்காக காத்திருப்பதாக கூறியுள்ளார்.

ITI women student missing in Hosur Parents allege police failed to investigate properly

பேருந்து வந்த பிறகு வருவதாக கூறிய சிறுமி, இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு திரும்பவில்லை. இரவு 10 மணி ஆகியும் மாணவி வீட்டிற்கு வராததால், பதறிய பெற்றோர் பாவனாவின் செல்போனை தொடர்பு கொண்டுள்ளனர். ஆனால் செல்போன் ஸ்விட்ச் ஆப் என்று வந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஐடிஐக்கு சென்று விசாரித்து இருக்கிறார்கள். அங்கு முறையாக பதில் கிடைக்காததால், உடனடியாக மத்திகிரி காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்துள்ளனர்.

புகார் அளித்து 15 நாட்கள் ஆகியும் இதுவரை மாயமான மகள் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை என்பதால் பெற்றோர் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர் காவல்துறையினரிடம் இது பற்றி கேட்டபோது, சரிவர பதில் கூறாமல் அலைக்கழிப்பதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், மாணவியை தேடி வருவதாக போலீசார் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தனது மகளை மீட்டுத்தர வேண்டும் என்று பெற்றோர், போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+