சம்பளதாரர்களுக்கு ஷாக்! வருமான வரி refund கிடைக்குமா? ITR தாக்கல் செய்யும் காலக்கெடு தள்ளிப்போகிறது?
சென்னை: வருமான வரி ITR தாக்கல் செய்வதற்கான E Filing இன்னும் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக சம்பளதாரர்கள் பலரும் refund பெற முடியாமல் தவித்து வருகின்றனர். . இதனால் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் தள்ளிப்போகலாம் என்கிறார்கள்.
2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை இன்னும் வெளியிடவில்லை அதாவது பொதுவாக ஜூலை 31ம் தேதி வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். ஆனால் இந்த ஜூலை 31ம் தேதி இந்த முறை தள்ளிப்போகும் வாய்ப்புகள் உள்ளன. ஏனென்றால்.. இன்னும் 2024-25 நிதியாண்டிற்கான (மதிப்பீட்டு ஆண்டு 2025-26) வருமான வரி அறிக்கை (ITR) படிவங்களை வருமான வரித் துறை வெளியிட்டுவிட்டது.

ஆனால் வருமான வரி ITR தாக்கல் செய்வதற்கான E Filing இன்னும் திறக்கப்படவில்லை. எல்லா படிவங்களும் வெளியானாலும் இன்னும் வருமான வரி அறிக்கை (ITR) இந்த FY வருடத்திற்கான E Filing ஐ தொடங்கவில்லை.
காலக்கெடு தள்ளிபோகுமா?
ஏற்கனவே ஒன்றரை மாதம் சென்றுவிட்டது. இனி மக்கள் அவசர அவசரமாக தாக்கல் செய்தாலும் பல லட்சம் பேர் தாக்கல் செய்யாமல் போகலாம். இந்த தாமதம் வரி செலுத்துவோர் மற்றும் தொழில் வல்லுநர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது. முக்கியமாக இந்த ஆண்டுக்கான கொள்கைகள் மற்றும் வரி regimeகள் ஏற்கனவே பட்ஜெட் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டும் கூட இன்னும் அறிக்கை வெளியிடப்படவில்லை. இதற்கு பின் சில காரணங்கள் உள்ளன.
31 ஜூலை 2025 - தணிக்கை தேவையில்லாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
31 அக்டோபர் 2025 - தணிக்கை தேவைப்படும் வணிகங்கள் அல்லது நிபுணர்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
30 நவம்பர் 2025 - தணிக்கை தேவைப்படும் மற்றும் TP (பரிமாற்ற விலை) விதிகளுக்கு உட்பட்ட நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாள்.
அரசின் தாமதம் காரணமாக மேற்கண்ட காலக்கெடு நீட்டிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
ஏன் இன்னும் வருமான வரி பக்கம் திறக்கவில்லை?
வருமான வரி பக்கம் திறக்கப்படாமல் போன தாமதத்திற்கான சாத்தியமான காரணங்களில் ஒன்று இன்னும் Back End வேலை நடந்து கொண்டு இருக்கிறது. அதாவது வருமான வரி பக்கத்தின் Back End வேலை நடந்து கொண்டு இருக்கிறது
புதிய regime படிவ மாற்றங்கள், பழைய regime மாற்றங்கள் ஆகிய மாற்றங்களை ஏற்கும் விதமாக வருமான வரி இ-ஃபைலிங் போர்டலில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.
வரி செலுத்துவோர் பயன்படுத்தும் வருமான வரி தளத்தின் மென்பொருள் கருவிகள் (JSON/Java/Excel பதிப்புகள்) இன்னும் சோதனை நிலையில் உள்ளன. கடைசி கட்ட சோதனைகள் நடந்து வருகின்றன.
முன்பே நிரப்பப்பட்ட ரிட்டர்ன் டேட்டாவிற்கு AIS (வருடாந்திர தகவல் அறிக்கை) மற்றும் TIS (வரி செலுத்துவோர் தகவல் சுருக்கம்) டேட்டா ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருவதால் அவை முடிந்த பின்பே வருமான வரி பக்கம் திறக்கும்.
2025-26 வருடத்திற்கான ரிட்டர்ன்ஸ் திறக்கவில்லை. இதை படிப்படியாக திறக்க உள்ளனர். கடந்த ஆண்டு ஏப்ரலில் ஏழு ஐடிஆர் படிவங்கள் வழங்கப்பட்டது, எனவே வருமான வரி கணக்கு தாக்கல் இந்த மாதம் தொடங்குவதை உறுதிசெய்ய தேவையான படிவங்களை வரித்துறை விரைவில் வழங்கும். கொஞ்சம் கொஞ்சமாக இந்த படிவங்கள் அளிக்கப்படும்.
பொதுவாக, இந்த பயன்பாடுகள் ஏப்ரல் முதல் படிப்படியாக வெளியிடப்படும். குறிப்பாக ஐடிஆர்-1 மற்றும் ஐடிஆர்-2 போன்ற படிவங்களுக்கு வருமான வரி போர்ட்டலில் அனுமதி தரப்பட்ட உடனே ITR தொடங்கும். ஏற்கனவே இந்த படிவம் திறந்து ITR தாக்கல் செய்தவர்களுக்கு.. இன்னும் 15-20 நாட்களில் refund கிடைக்கும். இனி தாக்கல் செய்பவர்களுக்கு அதிகபட்சம் 1 மாதத்தில் refund கிடைக்கும்.
ஏப்ரல் முதல் நீங்கள் வருமான வரி ரிட்டர்ன்ஸ் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம். நீங்கள் அந்த ஸ்லாபில் இருக்கும் பட்சத்தில் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். இதில் பின் வரும் தவறுகளை செய்யும் பட்சத்தில் உங்களுக்கு ரிட்டர்ன் refund தொகை கிடைக்காமல் போகலாம்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications