தவெகவுக்கு ஆதரவு இல்லை : இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி திடீர் மறுப்பு.. விஜய்க்கு சிக்கல்?
சென்னை: தவெகவுக்கு ஆதரவு இல்லை; திமுக தலைமையிலான கூட்டணியில் தொடர்வதாக ஐ.யு.எம்.எல். அறிவித்துள்ளது. 2 எம்எல்ஏக்களை கொண்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தவெகவுக்கு ஆதரவு என்று தகவல் வெளியான நிலையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ஐயுஎம்எல் கட்சியிடம் ஆதரவு கோரி தவெக எம்.எல்.ஏக்கள் சிடிஆர் நிர்மல்குமார், முஸ்தபா இருவரும் காதர் மொய்தீனுடன் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர். அன்றும் இன்றும் என்றும் திமுக கூட்டணிதான் என ஏற்கெனவே ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன் கூறியிருந்தார்.

108 எம்எல்ஏக்களுடன் தவெக தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், விஜய் ஆட்சியமைக்க மேலும் 11 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டது. இந்தச் சூழலில் காங்கிரஸ் தனது 5 எம்எல்ஏக்களுடன் ஆதரவை தவெகவுக்கு வழங்கியது.
அதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் உள்ளிட்ட திமுக கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு கடிதம் வாயிலாக அழைப்பு விடுத்தார். மேலும், தவெக நிர்வாகிகள் சிபிஐ, சிபிஎம், விசிக, ஐயூஎம்எல் தலைவர்கள், நிர்வாகிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு கோரினர்.
இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தவெகவுக்கான தனது ஆதரவை இன்று தெரிவித்துள்ளன. சிபிஐ, சிபிஐஎம் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கடிதம் வழங்கினர். ஆனால், விசிக இதுவரை அதிகாரப்பூர்வமாக ஆதரவு கடிதம் வழங்கவில்லை.
இந்தச் சூழலில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, தவெகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும், ஐ.யு.எம்.எல் கட்சி ஆதரவின் மூலம் தவெகவுக்கான ஆதரவு எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தவெகவுக்கு ஆதரவு இல்லை என ஐ.யூ.எம்.எல் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஐயுஎம்எல் மாநில முகநூல் பக்கத்தில், "தவெக ஆதரவு இல்லை. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடர்கிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசிக இன்னும் கடிதம் அளிக்காத நிலையில், தவெகவிற்கு தற்போது ஆதரவாக உள்ள எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 116 ஆக உள்ளது. பெரும்பான்மைக்கு இன்னும் 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. நாளை பதவியேற்பு விழா நடைபெறும் நிலையில் இன்னும் மெஜாரிட்டி உறுதியாகவில்லை. இதனால் தமிழக அரசியலில் உச்ச கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
“நீ நல்லா சாப்பிட்டிருக்க.. நான் சாப்பிடல”.. பயணியிடம் சம்பந்தமே இல்லாமல் பேசிய அமைச்சர் பார்த்திபன் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications