சிவரஞ்சனியை போட்டு தள்ளிட்டேன், மகளையும் முடிச்சுட்டேன்!" காலங்காத்தாலேயே அம்மாவுக்கு போன் செய்த மகன்
சென்னை: சென்னை திரு.வி.க நகர் பகுதியில் அரங்கேறியுள்ள ஒரு அதிர்ச்சிகரமான இரட்டைக் கொலை சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. குடும்பத் தகராறு மற்றும் சந்தேகத்தின் உச்சகட்டமாக, பெற்ற மகளையும் மனைவியையும் கூட விட்டுவைக்காமல் போய்விட்டது.. என்ன நடந்தது? யாரிந்த நபர்?
சென்னை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 47). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சிவரஞ்சனி (வயது 43). இவர் ஒரு டெய்லர், வீட்டிலேயே துணி தைக்கும் தொழில் செய்து வந்தார்.

சிவரஞ்சனி தம்பதி
இந்த தம்பதிக்கு 16 வயதில் பிரணவ் என்ற மகனும், 9 வயதில் ஜெயஹரிணி என்ற மகளும் இருந்தனர். மகன் பிரணவ் இப்போதுதான் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி முடித்துள்ளார். மகள் ஜெயஹரிணி 4-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த குடும்பம் ஒரு வீட்டின் மேல் தளத்தில் வசித்து வந்தது. அதே வீட்டின் கீழ்த் தளத்தில் சீனிவாசனின் தாய் மைதிலி வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு, சீனிவாசன் தனது நைட் டியூட்டியை முடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். பிறகு அவர் தனது மனைவி சிவரஞ்சனி மற்றும் மகள் ஜெயஹரிணியுடன் மேல் தளத்தில் தூங்கச் சென்றுள்ளார். பேரன் பிரணவ் மட்டும் தனது பாட்டி மைதிலியுடன் கீழ்த் தளத்தில் தூங்கியுள்ளார்.
மிட்நைட்டில் பயங்கரம்
மிட்நைட்டில் தூங்கிக் கொண்டிருந்த சீனிவாசனுக்கும் சிவரஞ்சனிக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மனநல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாகச் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், தனது மனைவியின் நடத்தையில் கடும் சந்தேகம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு நபரை சுட்டிக்காட்டி, அவருடன் சிவரஞ்சனியை இணைத்துப் பேசி அடிக்கடி தகராறில் ஈடுபட்டும் வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவும் அதேபோல தம்பதிக்குள் கடும் வாக்குவாதம் வெடித்துள்ளது.. அப்போது, ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்ற சீனிவாசன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து சிவரஞ்சனியின் கழுத்தை அறுத்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன 9 வயது சிறுமி ஜெயஹரிணி, அலறித் துடித்துக் கதறியுள்ளார்.
சத்தம் வெளியே கேட்டுவிடும் என்ற பயத்திலும் ஆத்திரத்திலும், சீனிவாசன் தான் பெற்ற மகள் என்றும் பாராமல் ஜெயஹரிணியின் கழுத்தையும் அதே கத்தியால் அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பிறகு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவானார்.
சென்னையில் இரட்டை கொலை
நேற்று அதிகாலை, தலைமறைவாக இருந்த சீனிவாசன் தனது அம்மா மைதிலிக்கு போன் செய்தார்.. அப்போது, "நான் மனைவி, மகளை கொலை செய்துவிட்டேன்" என்று மட்டும் சொல்லிவிட்டு போனை கட் செய்துவிட்டாராம்.. இதைக் கேட்டுப் பதறிப்போன மைதிலி, உடனடியாக மாடிக்கு சென்று பார்த்தபோது, அங்கே மருமகள் சிவரஞ்சனியும், பேத்தி ஜெயஹரிணியும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு அலறியுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திரு.வி.க நகர் போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டுப் போஸ்ட் மார்ட்டம் செய்வதற்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தனிப்படை அமைத்துத் தேடி வந்த நிலையில், திருமுல்லைவாயல் பகுதியில் பதுங்கியிருந்த சீனிவாசனைப் போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர். தொடர் விசாரணையும் நடக்கிறது..
சீனிவாசன் மனைவி, மகளை கொலை செய்தபோது, மகன் பிரணவ் அங்கு இல்லையாம்.. பாட்டியுடன் கீழே தூங்கிக் கொண்டிருந்தானாம்.. அதனால் உயிர் தப்பியிருக்கிறார்.. ஒரு குடும்பத்தையே சிதைத்த இந்தச் சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications