சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ...ஜெ. அன்பழகன் மகனுக்கு வாய்ப்பு!!
சென்னை: சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மறைந்த திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனின் மகன் ராஜா. சென்னை மேற்கு மாவட்ட செயலாளராக ஜெ. அன்பழகன் இருந்தார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த சேப்பாக்கம் எம்.எல்.ஏ.வும், சென்னை மேற்கு மாவட்ட செயலாளருமான ஜெ. அன்பழகன் கடந்த ஜூன் 10ஆம் தேதி உயிரிழந்தார். ஜூன் 2 ஆம் தேதி கொரோனா தொற்று காரணமாக சென்னையில் இருக்கும் ரேலா தனியார் மருத்துவமனையில் அன்பழகன் அனுமதிக்கப்பட்டு இருந்தார். வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அன்பழகன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இந்தியாவிலேயே கொரோனாவுக்கு உயிரிழந்த முதல் சட்டசபை உறுப்பினர் ஜெ. அன்பழகன்தான். அவர் தனது பிறந்த நாளிலிலேயே உயிரிழந்தார்.
சென்னை தியாகராய நகர் தொகுதியில் 2001லும், சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி தொகுதிகளில் 2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளிலும் வெற்றி பெற்று சட்டசபைக்கு சென்றவர். கடந்த மார்ச் மாத இறுதியில், சேப்பாக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கொரோனா நோய் தடுப்பு உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தார். இதற்கான நிதியை சென்னை மாநகராட்சி ஆணையரிடம் வழங்கி இருந்தார். இத்துடன், அவரது ஒரு மாத சம்பளமான 1,05,000 ரூபாயை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்காக வழங்கி இருந்தார்.
சமூக ஊடகங்களில் எப்போதும் தன்னை பிசியாக வைத்துக் கொண்டு இருந்தவர். ட்விட்டர், பேஸ்புக்கில் அடிக்கடி பதிவுகளை இட்டு வந்தார். தன்னை நாடி வந்தவர்களுக்கு உதவிகளை செய்து வந்தவர். திமுகவுக்கு சென்னையில் யானை பலமாக இருந்து பணியாற்றியவர். தனது மனதில் பட்டதை எந்தவித பயமும் இன்றி வெளிப்படையாக எந்த இடத்திலும் பேசக் கூடியவர். இவரது மறைவு திமுகவுக்கு இழப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தியாகராயர் நகரில் உள்ள பழக்கடை, சினிமா விநியோகம், உள்ளிட்ட தொழில்களை கவனித்து வரும் ராஜா திமுகவில் அடிப்படை உறுப்பினராக மட்டுமே இருக்கிறார். இவரது தந்தை மாவட்டச் செயலாளராக இருந்தும் இவருக்கு கட்சியில் இதுவரை எந்தப் பொறுப்புக்களும் வழங்கப்படாமல் இருந்தது. தற்போது வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications