சசிகலா- நடராஜன்தான் காரணம்.. அத்தை மரணம் இயற்கையானது அல்ல.. ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா பகீர்
சென்னை: என் அத்தையின் மரணம் இயற்கையானது அல்ல என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணம் அடைந்த போது அவரது அண்ணன் மகள் தீபா, அத்தையை பார்க்க தன்னை சசிகலா கோஷ்டியினர் அனுமதிக்கவில்லை என செய்தியாளர்களிடம் புகார் தெரிவித்திருந்தார். அப்பல்லோவில் சிகிச்சை மேற்கொண்டிருந்த தனது அத்தையை பார்க்க சென்ற போது தன்னை சசிகலா பார்க்கவிடவில்லை என்றும், இறுதி சடங்குகளுக்காக வந்த போதும் சசிகலா தரப்பினர் போலீஸாரை விட்டு தன்னை தடுத்து நிறுத்தியதாகவும் பரபரப்பு புகாரை தெரிவித்திருந்தார்.
அத்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலாவின் வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதாகவும் ஜெ தீபா தெரிவித்திருந்தார்.

உண்மை
மேலும் உண்மையை மறைக்க தனது தாயார் விஜயலட்சுமி மீது சசிகலா, ஆணையத்தில் வீண் பழிகளை சுமத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் தன்னை 1994 ஆம் ஆண்டு கொல்வதற்கு சசிகலா தரப்பு திட்டம் தீட்டியதாகவும் அதிலிருந்து தான் தப்பி பிழைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

கொலை முயற்சி
இது ஒரு முறை அல்ல, பல முறை தன்னை கொலை செய்ய சதி நடைபெற்றதாாகவும் குற்றம்சாட்டிய அவர் திவாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக தத்தெடுக்கவே சசிகலா தன்னை அத்தையுடன் நெருங்கவிடவில்லை என்றும் பல குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.

இயற்கையானது அல்ல
இந்த நிலையில் தமிழ் சேனலுக்கு ஒன்றிற்கு ஜெ.தீபா பேட்டி அளித்துள்ளார். அதில் ஜெ தீபா கூறியிருக்கையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் நிறைய விஷயங்கள் தெளிவாக இல்லை. இது குறித்து மேலும் விசாரணை நடத்த வேண்டும். 5 ஆண்டுகள் ஆணையம் செயல்பட்டும் நிறைய விஷயங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. எனது அத்தையின் மரணம் இயற்கையானது இல்லை.

சசிகலா சதி
என்னை எனது அத்தைக்கு பிடிக்காது என சசிகலா கட்டுக்கதைகளை தெரிவித்துள்ளார். என்னை அத்தைக்கு பிடித்ததால்தான் நாங்கள் அவரை நெருங்க விடாமல் பார்த்துக் கொண்டார் சசிகலா. என் அத்தையின் அரசியல் அதிகாரத்தின் மீது சசிகலா குடும்பத்திற்கு ஒரு ஆசை இருந்தது. என் அத்தையை கொல்ல வேண்டும் என சசிகலாவும் நடராஜனும் தெரிவித்தனர். இதற்கு சிலர் வேண்டாம் என்றனர் என பகீர் தகவல்களை அவர் தெரிவித்துள்ளார்.
-
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications