சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அக்டோபரில் கொரோனா உச்சம் தொடும்ங்கிறதை விடுங்கள்.. அரசின் நோக்கம் டெஸ்டிங்தான்.. ராதாகிருஷ்ணன்

Google Oneindia Tamil News

சென்னை: அக்டோபரில் கொரோனா உச்சத்தை தொடும் என்கிற தனியார் ஆய்வுகளை விடுங்கள். டெஸ்டிங்கை அதிகரிப்பதுதான் எங்கள் நோக்கம் . எனவே மக்கள் தயக்கமில்லாமல் சோதனை செய்ய வேண்டும் என சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் ஜெ ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் தனிமைப்படுத்துவதற்காக 17,000 படுக்கை வசதிகள் 52 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அது தொடர்ந்து அதிகரிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சென்னையில் மட்டுமல்லாமல் மதுரை, வேலூர், கடலூர் ஆகிய பகுதிகளிலும் படுக்கை வசதிகளை அதிகரித்து வருகிறோம்.

எனவே பொதுமக்கள் படுக்கை வசதி குறித்து எந்த அச்சமும் வேண்டாம். தனியார் மருத்துவமனைகளுக்கும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் குறித்த நிலவரங்களை தெரிந்து கொள்ள 104 கால் சென்டர்களை ஏற்படுத்தியுள்ளோம். இதன் மூலம் மருத்துவமனையின் காலியிடங்கள் குறித்த நிலவரம் தெரிவிக்கப்படும்.

 3 டூ 15 நாள்தான்.. கொரோனா ஓடிரும்.. குணமாய்ருவீங்க.. இதுதான் மருந்து.. ராம்தேவின் பதஞ்சலி அறிவிப்பு! 3 டூ 15 நாள்தான்.. கொரோனா ஓடிரும்.. குணமாய்ருவீங்க.. இதுதான் மருந்து.. ராம்தேவின் பதஞ்சலி அறிவிப்பு!

மக்கள் மைக் மூலம் அழைப்பு

மக்கள் மைக் மூலம் அழைப்பு

இந்த லாக்டவுனை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக சென்னையில் நோய் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு சென்று அங்கு மக்களை வரவழைத்து காலை 6 மணி முதல் 10 மணி வரை கொரோனா சோதனை செய்கிறோம். மற்ற மாநிலங்கள், மாவட்டங்களுடன் ஒப்பீடு ஏதும் செய்யாமல் சோதனைகளை நடத்தி நோயை கட்டுப்படுத்தும் முயற்சியில் உள்ளோம்.

பரிசோதனை

பரிசோதனை

குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள 6 மண்டலங்கள், குடிசை பகுதிகள், கன்டெய்ன்மென்ட் ஏரியாக்கள், ஆகியவற்றில் ஒருவரையும் விடாமல் சோதனை செய்கிறோம். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் சோதனை தீவிரமாகும். இலவசமாக செய்யப்படும் கொரோனா பரிசோதனையை பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கிறோம்.

பரிசோதனை

பரிசோதனை

டெஸ்ட் எடுத்துக் கொள்வதற்காக மற்ற பகுதியினரும் நாங்கள் இருக்கும் பகுதிகளுக்கு வரலாம். அங்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் முழுமையாக கவர் செய்து கொரோனா சோதனை செய்கிறோம். இந்தியாவிலேயே மிக அதிகமான பரிசோதனை கூடங்கள் தமிழகத்தில்தான் இருக்கிறது.

சிகிச்சை

சிகிச்சை

எக்ஸ்ரே மூலம் நோய் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோய் பாதிப்பு அதிகமாக இருந்தால் மருத்துவமனையிலும் குறைவாக இருந்தால் கோவிட் கேர்களிலும் சிகிச்சை அளித்து வருகிறோம். பரிசோதனை நடத்தப்பட்டவுடன் ஒவ்வொருவருக்கும் ஒரு தனி எண் வழங்கப்படும். சென்னையில் கண்ணகி நகர், சுனாமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் முகக் கவசம் அணிவதன் மூலம் நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.

https://tamil.oneindia.com/news/delhi/ramdev-s-patanjali-claims-corona-medicine-coronil-and-swasari-389171.html

English summary
Health Secretary J. Radhakrishnan calls people to do covid test in Chennai without any hesitation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X