Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை ஆர்ப்பாட்டம் நடப்பது உறுதி.. பேச்சுவார்த்தை, ஐகோர்ட் தீர்ப்பை தொடர்ந்து ஜாக்டோ ஜியோ அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாளை (பிப்ரவரி 25) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றும், மாவட்ட தலைநகரங்களில் காலை 11 மணிக்கு நிச்சயம் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளனர்.

jacto geo tn government high court

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (ஜாக்டோ- ஜியோ), புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற பிரதான கோரிக்கையையும், தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தியது.

மேலும், நாளை தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ-ஜியோ அறிவித்தது. இதற்கிடையே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து, முடிவு எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்த குழுவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ், கயல்விழி செல்வராஜ் இடம்பெற்றுள்ளனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் குழுவினர் இன்று காலை பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஜாக்டோ ஜியோ அமைப்பு மற்றும் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஆகிய சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், ஜாக்டோ - ஜியோ சங்கத்தினர் தங்கள் கோரிக்கைள் அனைத்தையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என்று நிர்வாகிகள் வலியுறுத்தினர். அமைச்சர்கள் அரசுக்கு 4 வாரங்கள் கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரியுள்ளனர். இந்நிலையில், இன்று மாலை, அமைச்சர்கள் குழுவினர் முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர்கள் குழு உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகள், நாளை (பிப்ரவரி 25) காலை 11 மணிக்கு திட்டமிட்டபடி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்தனர்.

தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், மறியல் போராட்டத்திற்குப் பதிலாக ஆர்ப்பாட்டமாக நடத்த இருக்கிறோம். எங்கள் ஊழியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம் என ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் அறிவித்துள்ளார்.

முன்னதாக, அனைத்து தாலூகா தலைநகரங்களிலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்ட்ரைக் மற்றும் சாலை மறியல் போராட்டம் பிப்ரவரி 25 அன்று நடைபெறும் என அறிவித்திருந்தனர். ஜாக்டோ ஜியோ அறிவித்திருந்த சாலை மறியல் போராட்டத்திற்கு தடை விதிக்க உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் மனு தாக்கல் செய்தார்.

கோரிக்கைகள் நியாயமாக இருந்தாலும் அது அவர்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையிலான பிரச்சனை. சாலை மறியல் நடைபெற்றால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவியர், மருத்துவ தேவைகளுக்காக செல்பவர்கள், என ஸ்டிரைக்கில் பங்கு பெறாத பலதரப்பட்ட மக்களும் பாதிப்பு அடைவார்கள், எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், பேச்சுவார்த்தை முடியும் வரை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் எவ்வித போராட்டத்திலும் ஈடுபடக் கூடாது என உத்தரவிட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் என்ன பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்பது குறித்து பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+