ஜாக்டோ-ஜியோ இன்று முதல் வேலைநிறுத்தம்... தலைமைச் செயலாளர் கடும் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Jactto-Geo Protest: ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டம்- வீடியோ

    சென்னை: ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

    புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய விகித முரண்பாடுகளை களைய வேண்டும்.

    21 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

    வேலைநிறுத்தம்

    வேலைநிறுத்தம்

    இன்று காலை 10 மணிக்கு மாநிலத்தின் அனைத்து தாலுகாக்களிலும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டமும், 23, 24-ந்தேதிகளில் தாலுகா தலை நகரங்களில் சாலை மறியல் போராட்டமும் 25-ந்தேதி மாவட்ட தலை நகரங்களில் வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விதிகளுக்கு எதிரானது

    விதிகளுக்கு எதிரானது

    இந்தநிலையில், அனைத்துத் துறை செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் எழுதி உள்ளார். அதில், அரசு அலுவலக செயல்பாடுகளை பாதிக்கும் வகையில் போராட்டங்களில் ஈடுபடுவது தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது என தெரிவித்துள்ளார்.

    ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

    ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

    காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் நாட்களில் எடுக்கப்படும் விடுமுறை விதிமீறலாக கருதப்பட்டு தொடர்புடைய ஊழியர்களின் பெயர் ஊதியத்துக்கோ, படிகளுக்கோ பட்டியலிடப்படக்கூடாது என்றும், அவர்கள் மீது தமிழ்நாடு அரசு ஊழியர் நன்னடத்தை விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

    வருகைப் பதிவேட்டு விவரம்

    வருகைப் பதிவேட்டு விவரம்

    தினக்கூலி அல்லது தொகுப்பூதியம் பெறும் பகுதி நேர ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது தெரிந்தால் அவர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் . வேலைநிறுத்த காலத்தில் ஒவ்வொரு துறையிலும் உள்ள ஊழியர்களின் வருகைப் பதிவேட்டு விவரங்களை காலை 10.15 மணிக்குள் அனுப்பவும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+