Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய் பீம்: சூர்யா கன்னத்தை பிடித்து நெகிழ்ந்த நல்லகண்ணு! "மாமனிதர் வாழ்த்திட்டார்" ரசிகர்கள் ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்து ரசித்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, படக் குழுவினரை நேரில் பாராட்டி இருக்கிறார்.

இருளர் பழங்குடி இனத்தினரை குறிவைத்து காவல்துறையினர் தொல்லை செய்வது போலவும், கஸ்டடியில் வைத்து அடித்துக் கொல்வது போலவும், அதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உதவியுடன் சட்டப் போராட்டத்தின் மூலமாக வெளிக்கொண்டு வருவது போலவும் ஜெய் பீம் திரைக்கதை அமைந்திருக்கிறது.

இந்த சம்பவம் ஏறத்தாழ நிஜ சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

 உண்மை சம்பவம்

உண்மை சம்பவம்

கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டு குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணன் என்பவர் காவல்துறையினரால் கஸ்டடியில் வைத்து அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தான் இந்த திரைப்படத்தில் தூண்டுகோலாக இருந்துள்ளது. உண்மை சம்பவத்தின் போதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட உதவிகள் கிடைப்பதற்கும் பிற உதவிகள் கிடைப்பதற்கும் மிகவும் உதவிகரமாக இருந்துள்ளனர். இந்த திரைப்படத்திலும் கம்யூனிஸ்ட் கட்சியினர் செய்யக்கூடிய உதவிகள் அவ்வப்போது காட்சிகள் வாயிலாக காண்பிக்க பட்டிருந்தன. இது அந்த கட்சியினருக்கு திருப்தியை கொடுத்துள்ளது.

 வன்னியர்கள் எதிர்ப்பு

வன்னியர்கள் எதிர்ப்பு

இன்னொரு பக்கம், வில்லன் கதாபாத்திரம், வன்னியர் இனத்தைச் சேர்ந்தவர் போல இந்த படத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது, ஆனால் உண்மையில் அப்படி கிடையாது, கொடுமைப்படுத்திய சப்-இன்ஸ்பெக்டர் பெயர் அந்தோணிசாமி என்று வன்னியர் அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன. வன்னியர் சங்கத்தின் அடையாளமான, அக்கினி கலசம் புகைப்படம் இடம்பெற்ற காலண்டர் வில்லன் கதாபாத்திரம் தொலைபேசியில் பேசும் போது அதன் பின்னணியில் காட்டப்பட்டது. எதிர்ப்பு எழுந்ததை அடுத்து கிராபிக்ஸ் மூலமாக அது மாற்றப்பட்டது. இருப்பினும் நடிகர் சூர்யா படத்தின் இயக்குனர் ஞானவேல் உள்ளிட்ட படக்குழுவினர், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் வலியுறுத்தி ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீதிமன்றத்திலும், வழக்கு தொடரப்பட்டுள்ளது.

 நல்லகண்ணு பார்த்தார்

நல்லகண்ணு பார்த்தார்

இப்படியான சர்ச்சைகளுக்கு மத்தியில் தான் மூத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் நல்லகண்ணு இந்த திரைப்படத்தை கடந்த 24ம் தேதி தனது இல்லத்தில் கம்யூனிச தோழர்கள் சிலரோடு சேர்ந்து பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப் போய் விட்டது. எனவே படக்குழுவினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அந்த படங்கள் தற்போது வெளியாகி வேகமாக சுற்றி வருகின்றன.

Recommended Video

    JaiBhim படத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் - அமைச்சர் Ramdas Athawale பேச்சு | Oneindia Tamil
     வித்தியாசமான கெட்அப்

    வித்தியாசமான கெட்அப்

    இந்த படத்தில் நடிகர் சூர்யா முடியை ஒட்ட வெட்டி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். அவரது அடுத்த திரைப்படத்திற்கான ஆயத்தத்தில் அவர் இருப்பது தெரிகிறது. சூர்யாவின் கையை நல்லகண்ணு பிடித்திருப்பது, சிவகுமார் மற்றும் நல்லகண்ணு பரஸ்பரம் கும்பிட்டு கொள்வது போன்ற படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றன. இதை பார்த்த சூர்யா ரசிகர்களும் நெட்டிசன்களும், மாமனிதர் வாழ்த்தி விட்டார், பிறகு என்ன என்று மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருகின்றனர். மூத்த அரசியல்வாதிகளில் எளிமைக்கு பெயர் பெற்றவருமான நல்லகண்ணு நண்பர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார் . இந்த படத்தை வாழ்த்து விட்டதால் வேறு சர்ச்சைகள் எங்தளுக்கு பெரிதாக தெரியவில்லை என்று புளங்காகிதம் தெரிவிக்கிறார்கள் சூர்யா ரசிகர்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+