சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அக்னி கலசத்தை பயன்படுத்தியது ஏன்? ஜெய் பீம் இயக்குனர் தந்த பரபர விளக்கம்.. இதுதான் காரணமா!

Google Oneindia Tamil News

சென்னை: ஜெய் பீம் படத்தில் காலண்டர் ஒன்றில் அக்னி கலசம் பயன்படுத்தப்பட்டது ஏன் என்று பட இயக்குனர் த. செ ஞானவேல் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் த. செ ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படம் சர்வதேச அளவில் ஹிட்டாகி உள்ளது. அதே சமயம் இந்த படத்தில் வன்னியர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் இருப்பதாக வன்னியர் சங்கம் குற்றஞ்சாட்டி உள்ளது.

பாமகவினரும் இந்த படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளது. இந்த படத்தின் காட்சி ஒன்றில் அக்னி கலசம் பயன்படுத்தப்பட்டது பெரிய சர்ச்சையாகி உள்ளது.

அதிமுகவுடனான கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.. குழப்பமே வேண்டாம்.. பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவுடனான கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.. குழப்பமே வேண்டாம்.. பாஜக தலைவர் அண்ணாமலை

 குருமூர்த்தி

குருமூர்த்தி

அதேபோல் இந்த படத்தில் வில்லனாக வரும் எஸ்.ஐ. பாத்திரத்துக்கு குருமூர்த்தி என்று பெயர் வைக்கப்பட்டது, காடுவெட்டி குருவை குறிப்பது போல இருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டு அது சர்ச்சையாகி உள்ளது. அதேபோல் இவரின் வீட்டில் அக்னி கலசத்தை குறிக்கும் வகையில் காலண்டரில் சின்னம் வைத்து இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது வன்னியர்களின் குல சின்னம் என்று பாமகவினரும், வன்னியர் சங்கங்களும் புகார் வைக்கின்றன.

நீக்க

நீக்க

இந்த நிலையில் சர்ச்சையை தொடர்ந்து இந்த காட்சி நீக்கப்பட்டது. அந்த காலண்டர் மாற்றப்பட்டு சரஸ்வதி காலண்டர் வைக்கப்பட்டது. இதற்கு ஒரு பக்கம் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்தான் இன்று படத்தின் இயக்குனர் ஞானவேல் கொடுத்த விளக்கத்தில் ஜெய் பீம் பட காட்சியில் அக்னி கலசம் பயன்படுத்தப்பட்டது ஏன் என்று கூறியுள்ளார்.

 அறிக்கை

அறிக்கை

இன்று படத்தின் இயக்குனர் த. செ ஞானவேல் வெளியிட்ட விளக்க அறிக்கையில், 'ஜெய் பீம்' திரைப்படத்திற்கு எல்லா தரப்பினரிடமிருந்தும் கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சி அளித்தது. அதேபோல, இத்திரைப்படத்திற்கு எழுந்த சில எதிர்மறைக் கருத்துகள் நான் சற்றும் எதிர்பாராதவை. பின்னணியில் மாட்டப்படும் ஒரு காலண்டர் படம், ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை . 1995 காலத்தைப் பிரதிபலிப்பதே அந்த காலண்டரின் நோக்கமே அன்றி, குறிப்பிட்ட சமூகத்தின் குறியீடாக அதைக் காட்ட வேண்டும் என்பது எங்கள் யாருடைய நோக்கமும் அல்ல.

போஸ்ட் புரடெக்ஷன்'

போஸ்ட் புரடெக்ஷன்'

சில வினாடிகள் மட்டுமே வருகிற அந்தக் காலண்டர் படம் படப்பிடிப்பின்போதும், 'போஸ்ட் புரடெக்ஷன்' பணியின்போதும் எங்கள் யாருடைய கவனத்திலும் பதியவில்லை. அமேசான் ப்ரைமில் படம் வெளிவரும் முன்பே, பெரிய திரையில் பல்வேறு தரப்பினரும் திரைப்படத்தைப் பார்த்தனர். அப்போது கவனத்திற்கு வந்திருந்தாலும் கூட , படம் வெளிவரும் முன்பே அதை மாற்றி இருப்போம்.

நீக்கம்

நீக்கம்

நவம்பர் மாதம் 1-ம் தேதி இரவு அமேசானில் படம் வெளிவந்தும், காலண்டர் படம் பற்றி சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தவுடன், உடனடியாக நவம்பர் 2-ம் தேதி காலையே அதை மாற்ற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்ட பிறகு, எங்களுக்குத் தனிப்பட்ட உள்நோக்கம் எதுவும் இல்லை என்பது எல்லோருக்கும் புரியும் என்று நம்பினேன்.

த. செ ஞானவேல் விளக்கம்

த. செ ஞானவேல் விளக்கம்

இயக்குநராக நான் மட்டுமே பொறுப்பேற்க வேண்டிய விஷயத்திற்கு திரு. சூர்யா அவர்களைப் பொறுப்பேற்கச் சொல்வது துரதிர்ஷ்டவசமானது, என்று விளக்கத்தின் ஒரு பகுதியில் இயக்குனர் ஞானவேல் குறிப்பிட்டுள்ளார். அதாவது 1995ல் கதை நடப்பதாக காட்சிகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. அதை பிரதிபலிக்க வேண்டும், அந்த கால் காட்சி போல காட்ட வேண்டும் என்றுதான் அந்த காலத்தில் இருப்பது போன்ற காலண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று இயக்குனர் கூறியுள்ளார்.

காரணம் என்ன

காரணம் என்ன

ஆனால் இது ஒரு சமூகத்தைக் குறிப்பதாகப் புரிந்து கொள்ளப்படும் என நான் அறியவில்லை என்று இயக்குனர் விளக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதிலும் கூட படத்தின் கதையில் இது இல்லை. படப்பிடிப்பின் போது வைக்கப்பட்டது. பின்னர் இணையத்தில் புகார்கள் வந்தவுடன் யாரும் கேட்பதற்கு முன்பே, அந்த காலண்டர் படம் மாற்றப்பட்டது என்று இயக்குனர் விளக்கம் அளித்துள்ளார்.

English summary
Jai Bhim: Director Gnanavel explains why he used Agni Kalasam in the calendar at Villain house.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X