ஜெய்பீம்- நடிகர் சூர்யாவுக்கு இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் ஆதரவு- 'காமெடி' சந்தானம் எதிர்ப்பு!
சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு திரை உலகம் ஆதரவு அதிகரித்து வருகிறது. நடிகர் சூர்யா மற்றும் ஜெய்பீம் படக் குழுவினருக்கு ஆதரவாக இருப்போம் என்று இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் திரைப்படத்தில் யாரையும் தாழ்த்தி பேசக் கூடாது என காமெடி நடிகர் சந்தானம், நடிகர் சூர்யாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பேசியிருக்கிறார்.
ஜெய்பீம் விவகாராத்தில் நடிகர் சூர்யாவிடம் வன்னியர் சங்கம் ரூ5 கோடி நட்ட ஈடு கேட்டது. நடிகர் சூர்யாவை உதைத்தால் ரூ1 லட்சம் பரிசு தருவோம் என மயிலாடுதுறை மாவட்ட பா.ம.க.செயலாளர் பழனிச்சாமி அறிவித்தது சர்ச்சையானது.
அதேநேரத்தில் திரை உலகம், இந்த விவகாரத்தில் கனத்த மவுனம் காத்தது. இது குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டன. இதனையடுத்து நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக திரை உலக பிரபலங்கள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தவறான முன்னுதாரணம்
இயக்குநர் பாரதிராஜா இன்று வெளியிட்ட அறிக்கையில், திரைத்துறையை விட்டுவிடுங்கள். யாருக்கு பயந்து படமெடுக்க வேண்டும் என தெரியவில்லை. வம்படியாக திணித்தோ, திரித்தோ 'ஜெய் பீம்' படத்தில் எந்தக் கருத்துருவாக்கமும் செய்யப்படவில்லை. ஒவ்வொரு அரசியல்வாதியின் வாசலிலும் கதைசொல்ல படைப்பாளிகள் காத்திருக்க வேண்டுமோ என்ற அச்சம் உருவாகிறது. நடிகர் சூர்யா மீது வன்மத்தை, வன்முறையை ஏவிவிடுவது மிகத்தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என கூறியிருந்தார்.

ஜெய்பீம் குழுவுக்கு வெற்றிமாறன் ஆதரவு
இயக்குநர் வெற்றி மாறன் வெளியிட்டிருந்த அறிக்கையில், பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்யும் வகையில் இப்படத்தை உருவாக்கிய இயக்குநர் ஞானவேலின் அர்ப்பணிப்பும், சமூக நீதிக்காக சூர்யாவின் தொடர் முயற்சிகளும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. இந்த நிலை மாறுவதை விரும்பாதவர்கள் மத்தியில் இந்தப் படங்கள் கோபத்தை ஏற்படுத்துவது இயற்கையே- நாங்கள் சூர்யாவின் பக்கம் நிற்கிறோம். சமூகத்தில் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் கேள்வி கேட்கும் எந்தவொரு படைப்புமே சமூக நீதிக்கான ஆயுதம்தான்.ஜெய் பீம் முழு படக்குழுவிற்கும் நாங்கள் துணையாக நிற்கிறோம் என கூறியிருந்தார்.

அமீர் ஆதரவு
இதேபோல் இயக்குநர் அமீர் தமது அறிக்கையில், சமூகநீதியை நிலைநாட்ட வற்பறுத்தும் திரைப்படைப்புகளையும், அதை மிகுந்த சிரமத்துடன் உருவாக்கும் படைப்பாளிகளையும் காக்க வேண்டியது அரசின் கடமை மட்டுமல்ல ஒரு நல்ல சமூகத்தின் கடமையும் கூட. அந்த வகையில் "ஜெய்பீம்" படக்குழுவினருடன் எப்போதும் நான்... என தெரிவித்துள்ளார்.

நடிகர் சந்தானம் எதிர்ப்பு
இந்த நிலையில் நடிகர் சூர்யாவுக்கு காமெடி நடிகர் சந்தானம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த சந்தானம், பட விளம்பர வேலைகளில் பிசியாக இருந்ததால் #WeStandWithSuriya குறித்த எதுவும் தனக்கு தெரியாது. ஒருவரை உயர்த்தி சொல்ல வேண்டும் என்பதற்காக மற்றொருவரை தாழ்த்தி சொல்வது சரியல்ல. திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது முறையானது அல்ல என சந்தானம் கூறியுள்ளார்.

சந்தானம் பேசியது என்ன?
சபாபதி பட நிகழ்வில் சந்தானம் பேசியதாவது: ஜெய்பீம் படமாக இருந்தாலும் எந்த படமானாலும் நாம் சொல்றது இதுதான்..நாம ஒரு கருத்தை சொல்றோம். பேசறோம்னா நான் இந்துயிசத்தை பற்றி பேசற.. இந்துன்னு பேசறன்னா நான் சூப்பர்.. உயர்ந்ததுன்னு என்ன வேணும்னாலும் பேசலாம். அது பிரச்சனை கிடையாது. ஆனா கிறிஸ்டியன் தப்பு.. அவன் தாழ்த்தப்பட்டவன்னு பேசக் கூடாது. எது நம்ம கருத்தோ அதை தூக்கி பேசலாம். அடுத்தவங்க ஹர்ட் பண்ற மாதிரி அவங்களை அமுக்கி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம். சினிமாங்கிறது 2 மணிநேரம் லைட் ஆப் பண்ணிட்டு எல்லாரும் எல்லா ஜாதிக்காரர்களும் மதத்துக்காரங்க பார்க்கிறது. அங்க இது தேவைப்படாத விஷயம். நீங்க இந்துமதத்தை தூக்கிகாட்டுங்க.. அல்லது எதை பிடிச்சிருக்கோ அதை தூக்கி காட்டுங்க. அது பிரச்சனை கிடையாது. ஆனா அடுத்தவனை தாழ்த்தி காட்டாதீங்க.. இந்து மதம் சூப்பர்னா அதை சொல்லுங்க.. அதுக்காக கிறிஸ்டியானிட்டியை தாழ்த்த கூடாது.. அதுதான் என் கருத்து. நாம எதனை வேணும்னாலும் தூக்கி பேசலாம்.. அது பிரச்சனையே இல்லை. இவ்வாறு சந்தானம் பேசினார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications