Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெய்பீம் விவகாரம்: நடிகர் சந்தானத்துக்கு சூரி மூலம் நடிகர் சூர்யா பதிலடி? தீ பறக்கும் ட்விட்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய்பீம் திரைப்பட விவகாரத்தில் நடிகர் சூர்யாவுக்கு எல்லோரும் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் நடிகர் சந்தானம் அட்வைஸ் கூறியிருந்தார். இதற்கு நகைச்சுவை நடிகர் சூரி மூலமாக நடிகர் சூர்யா பதிலடி கொடுத்திருக்கிறாரா? என்கிற விவாதம் எழுந்துள்ளது.

சென்னையில் சபாபதி திரைப்பட நிகழ்ச்சியில் நடிகர் சந்தானம் பங்கேற்றார். அப்போது ஜெய்பீம் திரைப்பட சர்ச்சை தொடர்பாக சந்தானத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சந்தானம், னிமாங்கிறது 2 மணிநேரம் லைட் ஆப் பண்ணிட்டு எல்லாரும் எல்லா ஜாதிக்காரர்களும் மதத்துக்காரங்க பார்க்கிறது. அங்க இது தேவைப்படாத விஷயம். நீங்க இந்துமதத்தை தூக்கிகாட்டுங்க.. அல்லது எதை பிடிச்சிருக்கோ அதை தூக்கி காட்டுங்க. அது பிரச்சனை கிடையாது. ஆனா அடுத்தவனை தாழ்த்தி காட்டாதீங்க.. இந்து மதம் சூப்பர்னா அதை சொல்லுங்க.. அதுக்காக கிறிஸ்டியானிட்டியை தாழ்த்த கூடாது.. அதுதான் என் கருத்து. நாம எதனை வேணும்னாலும் தூக்கி பேசலாம்.. அது பிரச்சனையே இல்லை என கூறியிருந்தார்.

நடிகர் சந்தானம் கருத்து

நடிகர் சந்தானம் கருத்து

மேலும் ஜெய்பீம் படமாக இருந்தாலும் எந்த படமானாலும் நாம் சொல்றது இதுதான்..நாம ஒரு கருத்தை சொல்றோம். பேசறோம்னா நான் இந்துயிசத்தை பற்றி பேசற.. இந்துன்னு பேசறன்னா நான் சூப்பர்.. உயர்ந்ததுன்னு என்ன வேணும்னாலும் பேசலாம். அது பிரச்சனை கிடையாது. ஆனா கிறிஸ்டியன் தப்பு.. அவன் தாழ்த்தப்பட்டவன்னு பேசக் கூடாது. எது நம்ம கருத்தோ அதை தூக்கி பேசலாம். அடுத்தவங்க ஹர்ட் பண்ற மாதிரி அவங்களை அமுக்கி பேசக் கூடாது. அது தேவையில்லாத விஷயம் என கூறியிருந்தார். நடிகர் சந்தானத்தின் இந்த பேச்சு அறிவுரை பாணியில் இருந்தாலும் நடிகர் சூர்யா ஆதரவாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

நடிகர் சூர்யா பதில்

நடிகர் சூர்யா பதில்

சமூக வலைதளங்களில் சந்தானத்துக்கு ஆதரவாக எதிராக ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்கில் தீயாக பறக்கின்றன. இந்த நிலையில் இன்று மாலை தமது ட்விட்டர் பக்கத்தில் சூர்யா அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன் ஒவ்வொரு நடிகர், நடிகைகள், பிரபலங்கள் என ஜெய்பீம் படத்தை பாராட்டிய அனைவரது ட்வீட்டுகளுக்கும் பதில் கொடுத்தும் இருக்கிறார். இதில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு நடிகர் சூர்யா அளித்த பதில் இப்போது புதிய சர்ச்சையாகி உள்ளது.

நடிகர் சூர்யாவின் கிண்டல்

நடிகர் சூர்யாவின் கிண்டல்

நடிகர் சூரி தமது ட்விட்டர் பக்கத்தில், இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம் ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன் #ஜெய்பீம் படமல்ல பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை. #JaiBhim என பதிவிட்டிருந்தார். இதற்கு நடிகர் சூர்யா, இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு என பதிவிட்டுள்ளார்.

ஹீரோன்னா சூரி? சந்தானமா?

ஹீரோன்னா சூரி? சந்தானமா?

நடிகர் சூர்யா இன்னொரு ஹீரோ என சூரியைத்தான் சொல்கிறாரா? அல்லது தமக்கு அறிவுரை என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவிக்கும் தற்போது சபாபதி படத்தின் ஹூரோவான நடிகர் சந்தானத்தை சொல்கிறாரா? என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளது. சூர்யாவின் இந்த ட்விட்டர் பதிவிலேயே இந்த கேள்வியையும் அதாவது ஹீரோன்னா சூரியா? சந்தானம் இல்லையா? என்கிற கிண்டல் பதிவையும் போட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+