ஸ்டாலினையே ஏமாத்திட்டாங்க.. சூர்யாவுக்கு "குரு"பெயர்ச்சி சரியில்லை.. மீண்டும் கொந்தளிக்கும் பாமக
சூர்யாவுக்கு, கரூர் பாமக கண்டனம் தெரிவித்துள்ளது
சென்னை: தமிழக முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றி, அவரிடம் ரூ 1 கோடி கொடுத்தது போல் நடித்துள்ளார்கள்.. சூர்யாவிற்கு குருபெயர்ச்சி சரியில்லை... அவர் வன்னிய சமுதாயத்தினரையும், பாமகவினரையும் மோதவிட நினைக்கின்றார் என்று பாமக குற்றஞ்சாட்டி உள்ளது.
சில தினங்களாகவே ஜெய்பீம் விவகாரம் வெடித்து கிளம்பி வருகிறது.. பாமக இந்த விஷயத்தை விடுவதாக இல்லை.. கடுமையான கண்டனங்களை விடுத்து வரும் நிலையில், பாமக தொண்டர்களும் சோஷியல் மீடியாவில் சூர்யாவுக்கு மிரட்டல்களை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொதுச் செயலாளர் பிஎம்கே பாஸ்கரன் கரூரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் சொன்னதாவது:
"எலிவேட்டை" என்கின்ற படத்தினை தயாரித்து, அந்த படத்திற்கு நேர்எதிர்மறையாக சித்தரித்து பணம் சம்பாதிக்க திட்டம் தீட்டிய நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா ஆகியோர் தயாரித்து இப்போது ஜெய்பீம் என்ற பெயரில் திரைப்படமாக வெளியிட்டுள்ளனர்.

சர்ச்சை
இந்த திரைப்படம் ஓடிடி மூலம் வெளியிட்டிருப்பதால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியிருந்தால் திரையரங்கு உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள்... இல்லாத டிரஸ்ட்டிற்கு ஒரு போலியான அட்டை படத்தை காசோலை மூலம் காட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலினையே ஏமாற்றி, அவரிடம் ரூ 1 கோடி கொடுத்தது போல் நடித்துள்ளார்கள்.

ஜெய்பீம்
பாவம் தமிழக முதல்வரும், இவர்கள் நடித்த ஜெய்பீம் படத்தின் பின்னணி என்ன என்று கூட தெரியாமல், அவரும் போட்டோ எடுத்துக் கொண்டுள்ளார்... இந்த படத்தின் டைரக்டர் யாரோ ஒருவரை திருப்திப்படுத்த நினைத்து இந்த சினிமாவை எடுத்துள்ளார்... சூர்யா ஒரு சாதாரண நடிகர். நடிகர் என்றால் யார் என்ன வேடத்தில் நடிக்க சொல்கின்றாரோ, அந்த வேடத்தில் நடிக்க வேண்டும். ஆனால், நடிகர் சூர்யா தமிழக மக்களை ஏமாற்றி வேடம் போட்டு வருகின்றார். மேலும், நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் அவரது மனைவி ஜோதிகா மற்றும் குடும்பத்தினர் சம்பாதிக்கும் பணத்திற்கு முதலில் வரியை கட்டு.

சூர்யா
அதை விட்டு விட்டு 30 பிள்ளைகளை படிக்க வைக்கின்றோம் எனப் பொய் கணக்கு காட்டி வெளிநாட்டில் இருந்து பணம் வாங்குகின்றாய். நடிகர் சிவக்குமார், அவரது மூத்த மகன் சூர்யாவை நல்ல முறையாக வளர்க்கவில்லை... தவறான கண்ணோட்டத்தில் பார்த்து வளர்த்துள்ளார். வன்னிய சமுதாயத்தினரையும், பாமகவினரையும் மோதவிட நினைக்கின்றார்... இப்போது வந்த குருப்பெயர்ச்சி நடிகர் சூர்யாவிற்கு சரியில்லை. அவர் வன்னிய சமுதாயத்தினரையும், பாமகவினரையும் மோதவிட நினைக்கின்றார்.

சாதி
ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் சீனில் நீ அந்த ஜாதியா, நீ இந்த ஜாதியா என்று ஜாதி, ஜாதியாக வகைப்படுத்தி அசிங்கப்படுத்தி இருக்கின்றார்... உண்மையான செங்கேணி பார்வதிக்கு, நடிகர் சூர்யா சம்பாதிக்கும் பணத்தில் ராயல்ட்டி கொடுக்க வேண்டும்.. மேலும், அந்த ஜெய்பீம் திரைப்படத்தில் உண்மை திருடன் யார், அவருக்கு என்ன தண்டனை கொடுத்தாய். திருடனுக்கு என்ன தண்டனை என்று கூற மாட்டாய், பொய்யாக சாதிவேறுபாடுகளை திரைப்படத்தின் மூலம் காட்டி அதன் மூலம் சுயவிளம்பரம் மட்டும் தேடிக் கொள்வாயா..?

விளம்பரம்
அதுமட்டுமல்ல, இனி வர உள்ள மற்ற நாட்களில் கரூர் மட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் சூர்யா, ஜோதிகா ஆகியோர் நடிக்கும் திரைப்படங்களை தியேட்டர்களில் வெளியிட தடைவிதிக்க வேண்டும்" என்று பிஎம்கே.பாஸ்கரன் காட்டமாக தெரிவித்துள்ளார்.
-
யாரையெல்லாம் நம்புகிறேனோ.. எல்லாம் துரோகியா இருக்காங்க.. கலங்கிய ராமதாஸ்.. ஓட்டம் பிடித்த புள்ளி -
பிரபல அரசியல்வாதி கரூரில் அரங்கேற்றிய B பிளான்.. தியாகராஜன் மனுவில் அந்த 1 பத்திரம்? ஆடிப்போன அறிவாலயம் -
கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம் -
பி.எஃப் கணக்கு வைத்திருக்கும் எல்லோருக்கும்.. அடிக்குது மெகா ஜாக்பாட்.. தேடி வரும் பணம்.. எவ்வளவு? -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
சிறகடிக்க ஆசை: விஜயா ஆட்டத்தை அடக்க வரும் புது மருமகள்.. சரியான பதிலடி கொடுத்த மீனா! சந்தோஷத்தில் மனோஜ் -
முதல் கூட்டத்திலேயே வானதிக்கு நோஸ் கட்.. கோவையில் ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக -
சவுதி அரேபியாவுக்கு வேட்டு வைக்கும் ஈரான்.. சூயஸ் கால்வாய்-க்கு செக்.. ஹாட்ஸ்பாட் ஆக மாறும் பாப் அல்-மண்டப்! -
கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் 35 நாட்கள் இடைவெளி.. புதிய 5 ரூல்ஸ் தெரியுமா? மானியம் வரவில்லைனா உஷார் -
தமிழக தேர்தல்.. எந்த கட்சிக்கு அரியணை ஏறும் வாய்ப்பு.. இதுவரை வந்த கருத்து கணிப்புகள்.. சொல்வது என்ன? -
நகைக்கடன் வைத்த 3 பேரில் ஒருவர் கவனிக்கலனா பிரச்சனை? RBI எச்சரிக்கை என்ன சொல்கிறது?












Click it and Unblock the Notifications