‘ஜெயிலர்’ படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்.. இயக்குநரிடம் சொன்னது என்ன தெரியுமா? நெல்சன் நெகிழ்ச்சி!
சென்னை: ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள 'ஜெயிலர்' படத்தைப் பார்த்துவிட்டு படத்தின் இயக்குநர் நெல்சனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். படம் பார்த்து வாழ்த்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் நெல்சன்.
ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று (ஆகஸ்ட் 10) வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பல மொழி திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

ஜெயிலர் திரைப்படம் நீண்ட நாட்களுக்குப் பிறகு ரஜினி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாதி அதகளமாக இருப்பதாக ரசிகர்கள் உற்சாகமாகத் தெரிவித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற காவல் அதிகாரி முத்துவேல் பாண்டியனாக ரஜினி மாஸ் காட்டி இருக்கிறார் என்கின்றனர் ரசிகர்கள். ஜெயிலர் திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் திரையரங்கில் பார்த்து ரசித்து தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், 'ஜெயிலர்' திரைப்படத்தை சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இசைக் கல்லூரியில் அமைந்துள்ள தாகூர் திரையரங்கில் நேற்று இரவு பார்த்து ரசித்துள்ளார். இதையடுத்து உடனடியாக இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினரை பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஜெயிலர் படத்தை பார்த்து வாழ்த்தியதற்கு முதல்வர் ஸ்டாலினுக்கு மிக்க நன்றி. உங்களின் ஊக்கத்திற்கும், பாராட்டுகளுக்கும், உத்வேகமான வார்த்தைகளுக்கும் நன்றி. நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் உங்கள் வார்த்தைகளால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.
-
"எனது மகள் திவ்யா பற்றி பரவி வரும் வதந்திகளில் எதுவும் உண்மையல்ல”.. நடிகர் சத்யராஜ் விளக்கம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications