4,56,946 கிராமங்களில் ஜல் ஜீவன் மிஷன் செயல் திட்டம்! வைகோ கேள்விக்கு பதிலளித்த மத்திய அமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நாடு முழுவதும் 4,56,946 கிராமங்களில் ஜல் ஜீவன் மிஷன் செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய நீர்வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நீர் ஆதாரத் திட்டம் தொடர்பாக வைகோ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இந்த தகவலை குறிப்பிட்டுள்ளார்.

அதன் விவரம் வருமாறு;

கேள்வி எண்-105

கேள்வி எண்-105

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு வைகோ எழுத்து மூலமாக எழுப்பியிருந்த கேள்வியில், கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில், நீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமல்லாது, கிராமப் பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து ஒன்றியங்கள் மூலம் நீர் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்படுமா? என வினவியிருந்தார். மேலும், அப்படியானால், அதன் விவரங்கள் மற்றும் அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? எனவும் வைகோ கேட்டிருந்தார்.

அமைச்சர் பதில்

அமைச்சர் பதில்

வைகோவில் கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் பதில் கூறியிருப்பதாவது, ''நீர் ஆதாரத் திட்டம் (ஜல் ஜீவன் மிஷன்) தேவைக்கேற்ப விரிவாக்கப்பட்டு, நீர்வளங்கள் உள்கட்டமைப்பு திட்டத்தைச் செயல்படுத்த, மேலாண்மை மற்றும் பராமரிப்புப் பணிகளில் மக்களின் பங்களிப்பை வலியுறுத்துகிறது.''

மக்கள் இயக்கம்

மக்கள் இயக்கம்

''தகவல் தொடர்புகள், ஆய்வுக் கூட்டங்கள், பயிலரங்கங்கள், சமூக வலைதளங்கள் மற்றும் களப் பார்வைகள் போன்றவற்றின் மூலம் நீண்ட கால சேவை வழங்குவதற்கான உள்கட்டமைப்பில் மக்களின் உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. மேலும் இது மக்கள் இயக்கமாக உருவாக்க பெரிய அளவில் பொது மக்களை அணிதிரட்டுமாறு வலியுறுத்துகிறது. மேலும், உரிமை மற்றும் உணர்வைக் கொண்டுவர, பொதுமக்கள் பங்களிப்பு வேண்டும்.''

மூலதனச் செலவு

மூலதனச் செலவு

''இது மலை மற்றும் வனப்பகுதியில் வாழும் 50% க்கும் அதிகமான ஆதிதிராவிட கிராமங்களில் நீர் விநியோக உள்கட்டமைப்புக்கான மூலதனச் செலவு 5% ஆகும். பழங்குடியின மக்கள் வாழும் கிராமங்கள் மற்றும் மீதமுள்ள கிராமங்களில் 10%. திட்டங்கள் நீண்ட காலம் நிலைத்து இருக்கவும், எதிர்பாராத செலவினங்களைச் சந்திக்கவும் சுழல் நிதியாக, கிராமப்புற உள்கட்டமைப்பு செலவில் 10% பொதுமக்கள் சேவைக்கு அளிக்கப்படும். ''

பெண் உறுப்பினர்கள்

பெண் உறுப்பினர்கள்

''நீர் ஆதாரத் திட்டச் செயல்பாட்டு வழிகாட்டுதல்களில் உள்ளபடி, கிராம பஞ்சாயத்துக்களில் துணைக் குழுவை அமைக்க வேண்டும். அதாவது கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழு (VWSC)/ நீர் ஆதாரக் குழு/ பயனீட்டாளர் குழு போன்றவை பங்கேற்பை உறுதிசெய்ய குறைந்தபட்சம் 50 பெண் உறுப்பினர்களைக் கொண்ட குழுவை அமைக்க வேண்டும்.''

4,56,946 கிராமங்கள்

4,56,946 கிராமங்கள்

''கிராமங்களில் நீர் ஆதாரத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு வசதியாக, கிராம பஞ்சாயத்துக்கள், கிராம நீர் மற்றும் சுகாதாரக் குழுக்கள் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும். 6,01,463 கிராமங்களில், 5,02,414 கிராமங்களில் கிராம பஞ்சாயத்து துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு 4,56,946 கிராமங்களில் செயல்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+