“ஷாக்” ஆவீங்க.. இதான் உண்மை! பாஜகவுக்கு இத்தனை தேர்தல்களில் தோல்விகளா? லிஸ்டு போட்ட ஜேம்ஸ் வசந்தன்
சென்னை: கர்நாடகா மாநில சட்டசபைத் தேர்தலில் பாஜக படுதோல்வி அடைந்து ஆட்சியை இழந்திருக்கும் நிலையில், அந்த கட்சி இதற்கு முன் நடைபெற்ற பல தேர்தல்களில் தோல்வியையே தழுவி இருப்பதாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பகிர்ந்து உள்ளார்.
கர்நாடகா மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசின் பதவிக்காலம் வரும் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தியது.

கடந்த 13 ஆம் தேதி பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்று பாஜகவிடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி உள்ளது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படும் 136 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்று இருக்கிறது.
இதில் ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா 65 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று ஆட்சியை இழந்து உள்ளது. கிங் மேக்கராக இருப்பார். குமாரசாமியின் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி 19 தொகுதிகளிலும், பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா கட்சி ஒரு தொகுதியிலும், சர்வோதயா கர்நாடகா பக்ஷா கட்சி 1 தொகுதியிலும், சுயேட்சை ஒரு தொகுதியிலும் வெற்றிபெற்று இருக்கின்றன.
இதுகுறித்து வேறொரு நபர் வெளியிட்ட பதிவை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டு உள்ளார். அதில், "கொஞ்சம் டைம் எடுங்க .. நம்புங்க .. அதிர்ச்சி அடைவீங்க ..! ஹிமாச்சல் தோல்வி, ஜார்கண்ட் தோல்வி, ஒடிசா தோல்வி, சட்டீஸ்கர் தோல்வி, மேற்கு வங்கம் தோல்வி, தெலுங்கானா தோல்வி, ஆந்திரா தோல்வி, ராஜஸ்தான் தோல்வி, கேரளா தோல்வி, தமிழ் நாடு தோல்வி, பீகார் தோல்வி, சிக்கிம் தோல்வி, பஞ்சாப் தோல்வி இரண்டு முறை, டெல்லி தோல்வி இரண்டு முறை.
மத்திய பிரதேசம் தோல்வி திருட்டுத்தனமாக ஆட்சி, மேகாலயாவில் தோற்றது குதிரை பேரத்தில் நீடிக்கும் ஆட்சி, கர்நாடகாவில் மூன்று முறை தோற்றுவிட்டு இரண்டு முறை குதிரை பேரத்தில் ஆட்சி, மிஜோரம் தோல்வி குதிரை பேரத்தில் ஆட்சி, நாகாலாந்தில் தோல்வியுற்று எதிர்க்கட்சிகளை மிரட்டி ஜனநாயகத்திற்கு விரோதமாக ஆட்சி, மகாராஷ்டிரா வில் தோல்வியடைந்து பின்பு ஜனநாயகத்தை படுகொலை செய்து ஆட்சி அமைத்தது.
இது உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. இந்த பட்டியல் கொஞ்சம் அதிர்ச்சி அளிக்கிறது இல்லையா..?? ஆனால் இதுதான் உண்மை. உண்மை இவ்வாறிருக்க தொடர்ந்து இவர்கள் வெற்றி பெறுகிறார்கள் என்ற வெற்று பிம்பத்தை ஊதி ஊதி பெரிசாக்குகிறார்கள்." என்று பதிவிட்டு உள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications