பொங்கல் பண்டிகை: திருச்சி மக்களே நோட் பண்ணுங்க.. ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில், திருச்சி - தாம்பரம், தாம்பரம் - திருச்சி இடையே தன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் வகையில் பொங்கல் பண்டிகை தொன்றுதொட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பொங்கல், கரும்பு, புத்தாடை, நீண்ட நாள் விடுமுறை, வீர விளையாட்டுகள் என ஊரே களைகட்டி இருக்கும்.

எந்த ஊரில் இருந்தாலும் பொங்கல் பண்டிகை என்றால் பொதுமக்கள் ஏராளமானோர் சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். இதனால், வெளியூர்களில் கல்வி, வேலைக்காக தங்கியிருக்கும் பலரும் பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வர். குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் குறிப்பாக தொடர் விடுமுறை கிடைப்பதால் ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்குச் பயணம் செய்வார்கள்.
2025 புத்தாண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 14 ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று கொண்டாடப்பட உள்ளது. அதற்கடுத்த நாள் ஜனவரி 15 ஆம் தேதி திருவள்ளுவர் நாள், அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி திருவள்ளுவர் நாள், ஜனவரி 16 ஆம் தேதி உழவர் நாள் கொண்டப்படுகிறது. ஜனவரி 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்கள் தமிழக அரசு சார்பில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்கும் பொருட்டும், இனிமையான பயணத்தை மேற்கொள்ளும் வகையிலும், தொடர் விடுமுறை நாட்கள், தீபாவளி, பொங்கல், ஆயூத பூஜை போன்ற பண்டிகைக் காலங்களிலும் சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் இயக்கத்தை அறிவிப்பது வழக்கம்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சொந்த ஊருக்குச் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக திருச்சி - தாம்பரம், தாம்பரம் - திருச்சி இடையே தன் சதாப்தி சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: திருச்சி - தாம்பரம் அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் 06190) ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் திருச்சியில் இருந்து காலை 5.35 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும்.
மறுவழித்தடத்தில் தாம்பரம் - திருச்சி அதிவிரைவு சிறப்பு ரயில் (ரயில் எண் - 06191) ஜனவரி 4, 5, 10, 11, 12, 13, 17, 18, 19 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து பகல் 3.30 மணிக்கு புறப்பட்டு இரவு 11.35 மணிக்கு திருச்சி சென்றடையவுள்ளது.
இந்த ரயிலானது தஞ்சாவூா், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக இயக்கப்படவுள்ளது என்று தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மணப்பாறை சிப்காட்: 650 பேருக்கு வேலை ரெடி! வேகமெடுக்கும் பெப்சி ரூ.880 கோடி மெகா தொழிற்சாலை திட்டம் -
திருச்சிக்கு இன்று வருகிறார் முதல்வர் விஜய்.. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க தவெக பிரமாண்ட ஏற்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications