Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jana nayagan Censor: ஜன நாயகன் படம் ரிலீஸ்.. நல்ல முடிவு வெளியாகும்.. படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் திரைப்படத்திற்கு விரைவில் நல்ல முடிவு வெளியாகும் என்று படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறியுள்ளார். தீர்ப்பு நாளை அல்லது நாளை மறுநாள் வெளியாக வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்று வழங்கும் விவகாரத்தில் தணிக்கை குழு மற்றும் படக்குழு தரப்பினரின் வாதங்களை கேட்டறிந்த சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நிலையில் இவ்வாறு கூறியுள்ளார்.

விஜய்யின் ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் இதுவரை படம் வெளியாகவில்லை. கடந்த 9 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என படக்குழு தெரிவித்து இருந்த நிலையில் இதுவரை வெளியாவதற்கான சூழல் கூட இல்லாததால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

Jana nayagan Censor Film to Be Released Soon Advocate Says Positive Outcome Expected

மேலும் தேர்தலுக்கும் இன்னும் சில காலங்களே உள்ளதால் படம் இப்போது வெளியாகுமா அல்லது தேர்தலுக்கு பிறகு தான் வெளியாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலையில் தான் இன்று ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கக் கோரிய வழக்கில் CBFC தாக்கல் செய்த மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது முதலில் தணிக்கை குழு தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.

CBFC தரப்பில், தங்களின் பதிலை தாக்கல் செய்ய போதிய நேரம் வழங்கப்படவில்லை எனவும், ஒரே நாளில் நீதிபதி தீர்ப்பளித்து விட்டார் என்றும் கூறப்பட்டது. மேலும், 06.01.2026 அன்று திரைப்படத்தை மறுஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய முடிவு நீதிமன்றத்தில் நேரடியாக சவால் செய்யப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது.

அப்போது நீதிபதி, திரைப்படத்தை பார்க்கும் குழு, ஆலோசனை குழு மற்றும் வாரியத்தின் வேலைகள் எப்படி நடைபெறும் என கேள்வி எழுப்பினார். இதற்கு திரைப்படத்தை பார்த்து பரிந்துரை செய்யும் குழுவின் கருத்து இறுதி முடிவு அல்ல. இறுதி முடிவை வாரியமே எடுக்கிறது என்று CBFC தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து படக்குழுவும் தங்களது வாதங்களை வைத்தது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார். இந்த நிலையில், ஜனநாயகன் படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் படம் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்தார். அவர் கூறுகையில், ஜனநாயகன் சென்சார் சான்று வழக்கில் நாளை அல்லது நாளை மறுநாள் தீர்ப்பு அளிக்கப்படும்.

சென்சார் போர்டில் இருக்கும் 5 பேர் படத்தை பார்த்து போர்டுக்கு அனுப்பிய பிறகு ஒருவர் அளித்த புகாரின் பேரில் படத்தின் ரிலீசை நிறுத்துவது என்பது சட்ட ரீதியாக தவறு.. விரைவில் படம் வெளியாகும்" என்று கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+