தள்ளிப்போன ‛ஜனநாயகன்' ரிலீஸ்.. விஜய்க்கு இப்படியொரு நன்மையா? படக்குழுவுக்கு கிடைக்கும் பெரிய பலன்
சென்னை: நடிகர் விஜயின் ‛ஜனநாயகன்' திரைப்படம் ஜனவரி 9 ம்தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் சென்சார் சான்று கிடைக்காததால் தற்போது திரைப்படம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் சோகத்தில் உள்ளனர். ஆனால் உண்மையில் ‛ஜனநாயகன்' திரைப்படம் தள்ளிப்போனதில் விஜய் மற்றும் படக்குழுவுக்கு பெரிய பலன் கிடைக்க உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளார். இந்நிலையில் தான் அவர் தனது கடைசி படமான ‛ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த திரைப்படத்தை இயக்குநர் எச் வினோத் இயக்கி உள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையொட்டி வரும் 9 ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்துக்கான சென்சார் சான்று கிடைக்கவில்லை. இதனால் திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக திரைப்பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன், ‛‛ஜனநாயகன் திரைப்படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகாது. தள்ளி வைக்கப்பட்டுள்ளது. எங்கள் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக தற்போது திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
திரைப்படத்தின் ரிலீசுக்கான மாற்று தேதி விரைவிலேயே அறிவிக்கப்படும்'' என அறிவித்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் அவர்கள் ‛ஜனநாயகன்' திரைப்படத்துடன் பொங்கலை கொண்டாட தயாராகி வந்த நிலையில் அவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் தான் ‛ஜனநாயகன்' திரைப்படம் ரிலீஸ் தள்ளிப்போனதன் மூலமாக விஜய் மற்றும் படக்குழுவுக்கு பெரிய பலன் கிடைக்க உள்ளது. அதாவது தமிழகத்தில் ஜனநாயகன் திரைப்படத்துக்கு போட்டியாக ஜனவரி 10ம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ‛பராசக்தி' திரைப்படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‛பராசக்தி' திரைப்படத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பநிதியின் ‛ரெட் ஜெயண்ட்' நிறுவனம் வெளியிடுகிறது. இதனால் தியேட்டர் பிரச்சனை வரும். ‛பராசக்தி' திரைப்படத்துக்கும் தியேட்டர் போகும் என்பதால் ‛ஜனநாயகன்' திரைப்படத்துக்கு குறைந்த அளவில் தான் தியேட்டர் கிடைத்து இருக்கும். தற்போது ‛ஜனநாயகன்' தள்ளிப்போய் இருப்பது படக்குழுவுக்கு ஒருவகையில் நல்ல விஷயமாகும். தனியாக ‛ஜனநாயகன்' வெளியாகும்போது நிறைய தியேட்டர் கிடைத்து அதிக வசூலை அள்ள வாய்ப்புள்ளது.
அதேபோல் தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடித்த ‛மனா சங்கர வர பிரசாத் காரு' என்ற திரைப்படம் ஜனவரி 9 ம் தேதி ரிலீசாக உள்ளது. இதில் ‛மனா சங்கர வர பிரசாத் காரு' திரைப்படத்தில் நடிகர் சிரஞ்சீவியுடன் நடிகர் வெங்கடேஷ், நடிகை நயன்தாரா, கேத்தரின் தெரசா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். இதனால் இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.
மேலும் நடிகர் பிரபாஸின் ‛தி ராஜா சாப்' என்ற திரைப்படமும் ஜனவரி 9 ம் தேதி ரிலீசாக உள்ளது. சிரஞ்சீவி, வெங்கடேஷ், பிரபாஸ் ஆகியோர் தெலுங்கில் பெரிய ஹீரோக்கள்.. இதனால் ஆந்திராவில் இவர்களின் படத்துக்கு தான் அதிகமான தியேட்டர்கள் வழங்கப்படும்.
ஜனவரி 9ல் ஜனநாயகன் வெளியாகும் பட்சத்தில் குறைந்த அளவில் தான் அங்கு தியேட்டர்கள் கிடைத்து இருக்கும். தற்போது படம் தள்ளிப்போய் தனியாக ‛ஜனநாயகன்' வெளியாகும்போது நிறைய தியேட்டர் கிடைத்து அதிக வசூலை அள்ள வாய்ப்புள்ளது. இது விஜய் மற்றும் படக்குழுவினருக்கு பாசிட்டிவான ஒன்றாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பொங்கல் நேரத்தில் பொதுமக்களுக்கு தொடர்ந்து விடுமுறைகள் இருக்கும். இதனால் அதிகமானவர்கள் குடும்பத்துடன் தியேட்டர்களுக்கு சென்று திரைப்படங்களை ரசிப்பார்கள். ஆனால் அதன்பிறகு தொடர்ந்து விடுமுறை கிடைக்காது. இது பின்னடைவாக இருக்கலாம். ஆனால் நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது.
விஜய் டாப் ஹீரோ என்பதோடு, அவரது கடைசி படம், அரசியல் சார்ந்த வசனங்கள் இடம்பிடித்து இருப்பது படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்கள் எப்போது வெளியானாலும் அந்த திரைப்படத்தை கூட்டம் கூட்டமாக பார்ப்பார்கள் என்பது படக்குழுவுக்கு ஆறுதலாக விஷயமாகும்.












Click it and Unblock the Notifications