ஜனநாயகன் கடைசி ஃபிரேமில்! "பிரியமுடன் விஜய்"! கார்டை பார்த்ததும் கலங்கிய ரசிகர்கள்! குமுறிய ஆனந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜனநாயகன் படத்தின் கடைசி ஃபிரேமில் பிரியமுடன் விஜய் என இடம்பெற்ற வாசகத்தை கண்ட அமைச்சர் ஆனந்த் உள்ளிட்டோர், ரசிகர்கள் கண் கலங்கினர்.

ஜனநாயகன் திரைப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு இன்று இந்தியா முழுவதும் வெளியானது. அது போல் உலகளவிலும் உள்ள தியேட்டர்களில் வெளியானது.

Jananayagan

இந்த படம் வெளியீட்டுக்காக 6 மாதங்களாக காத்திருந்த ரசிகர்கள் காலை முதலே தியேட்டர் வாசலில் குவிந்தனர். அங்கு விஜய் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தனர். மேலும் சிலர் மஞ்சள், குங்குமத்தாலும் அபிஷேகம் செய்தனர்.

ஜனநாயகன் வெளியானதால் தியேட்டர் வாசல்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருந்தது. "தேர்தலுக்கு முன்னாடி இது தளபதி விஜய் படம், இப்போது இது முதல்வர் விஜய் படம்" என மகிழ்கிறார்கள்.

தமிழ் சினிமாவுக்கும் தமிழக அரசியலுக்கும் இது ஒரு வரலாற்று நாள் என ரசிகர்கள் தெரிவித்திருந்தனர். படம் ரிலீஸானது எத்தனை மகிழ்ச்சியோ அவர் இனி நடிக்க மாட்டார் என சொல்லியிருந்தது ரசிகர்களுக்கு எமோஷனலாகவும் இருந்தது.

விஜய் படத்தை கொண்டாட பலர் விஜய் படம் பொரித்த டீசர்ட்களை அணிந்து வந்திருந்தனர். டிஜே மியூசிக் போட்டு அதில் விஜய் பாடல்களை ஒலிபரப்பப்பட்டு ஒரே ஆட்டமாக இருந்தது.

தமிழகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கிய ஜனநாயகன் மற்ற மாநிலங்களில் காலையிலேயே தொடங்கியது. கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் படம் பார்க்க வந்தவர்கள் ஆர்வ கோளாறால் வாகனங்களை சாலையிலேயே விட்டுச் சென்றனர். அப்போது போலீஸார் அங்கு வந்து 50-க்கும் மேற்பட்ட பைக்குகளை பெரிய வாகனங்களில் (tow) ஏற்றிச் சென்றனர்.

பைக்குகளிலும் ஜனநாயகன் ஸ்டிக்கர்களை ஒட்டி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க சில தியேட்டர்களில் முதல் காட்சியை பார்க்க போதிய கூட்டம் இல்லாததால் அந்த காட்சியை தியேட்டர் நிர்வாகம் ரத்து செய்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அது போல் இந்த படத்தின் டைட்டிலில் சட்டசபையில் முதல்வர் விஜய் செய்த ஃபினிஷ்டு சைகை வைக்கப்பட்டுள்ளது. முதல்வர் விஜய் என்றும் டைட்டில் கார்டில் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை தமிழக தவெக அமைச்சர்கள் பெரும்பாலானோர் கண்டு களித்தனர். அமைச்சர்கள் ஆனந்த், அருண்ராஜ் ஆகியோர் கோயம்பேடு ரோகிணி தியேட்டரில் பார்த்தனர். இந்த படத்தின் முடிவில் "End" என போட்டு "Beginning" என மாறியது. உடனே பிரியமுடன் விஜய் என காட்சி இடம் பெற்றிருந்தது. அத்துடன் விஜய் நடித்த படங்களின் சிறந்த காட்சிகளும் தொகுக்கப்பட்டிருந்தது.

இனி விஜய் நடிக்க மாட்டார் என்பதை ஏற்க மனமில்லாமல் பலரும் கண்கலங்கினர். புஸ்ஸி ஆனந்தும் இனி தலைவரின் படத்தை பார்க்க முடியாதே என கலங்கினார். பின்னர் அவருக்கு அருகில் இருந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள். ஆக மொத்தம் காலை சிரித்தபடியே சென்றவர்கள் எல்லாம் சினிமா முடிந்து வெளியே வந்த போது அழுதுக் கொண்டே வந்தார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+