ஜனநாயகன் vs பராசக்தி.. விஜய்க்கு மரியாதை கொடுங்க.. சிவகார்த்திகேயனை டிரால் செய்யும் தவெகவினர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என்ற தகவல் பரவி வருவதால், விஜய் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். விஜய்யின் கடைசி படத்திற்கு சிவகார்த்திகேயன் மரியாதை கொடுக்க வேண்டாமா? துப்பாக்கியை கையில் கொடுத்தவருக்கு மரியாதை அளிக்க வேண்டாமா என்றெல்லாம் சோசியல் மீடியாவில் ஆவேசமாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2026ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டு செயல்பட்டு வரும் விஜய், தனது கடைசி படமாக ஜனநாயகன் படத்தை அறிவித்தார். அ.வினோத் இயக்கத்தில் பூஜா ஹெக்டே, மமீதா பைஜு, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி டியோல் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர்.

Jananayagan vs Parasakthi

ஏற்கனவே ஜனநாயகன் படத்தில் 2 பாடல்கள் வெளியாகி இருக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் மலேசியாவில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. விஜய்யின் கடைசி படம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பராசக்தி திரைப்படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று கூறப்பட்ட சூழலில், தற்போது ஜனவரி 9ஆம் தேதியில் ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு சுமார் 10 நாட்கள் விடுமுறை இருப்பதால், பலரும் பொழுதுபோக்குக்காக தியேட்டர்களுக்கு வருவார்கள் என்று கணக்கிட்டு, பராசக்தியை முன்னதாக ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடந்து வருகிறது.

அதற்கேற்ப பராசக்தி படத்தின் விளம்பர பணிகளும் தொடங்கியுள்ளன. இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், திமுகவின் இந்தி எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது.

இந்த நிலையில் விஜய்யின் கடைசி படம் சோலோவாக ரிலீஸாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவுக்கு பங்களித்து வந்துள்ள விஜய்யின் கடைசி படத்திற்கு மரியாதை அளித்து சிவகார்த்திகேயன் போட்டியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று தவெகவினர் பதிவிட்டு வருகின்றனர்.

அதேபோல் துப்பாக்கியை கையில் கொடுத்தது? கிட்ஸை பிடித்துவிட்டார் என்று பாராட்டி சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு விஜய் உறுதுணையாக இருந்ததாகவும் விஜய் ரசிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கு சிவகார்த்திகேயன் ரசிகர்களோ, சினிமா ஒரு தொழில்.. உங்கள் படம் மட்டுமே ரிலீஸாக வேண்டும் என்று சொல்வது நியாயமா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இன்னொரு பக்கம் பராசக்தி படத்தை வைத்து திமுக அரசியல் செய்வதாகவும் தவெகவினர் பேச தொடங்கியுள்ளனர். பராசக்தி படத்தை இன்பன் உதயநிதி ஸ்டாலின் வழங்குவதால், ஜனநாயக படத்தின் திரையரங்க எண்ணிக்கைக்கு நிகராக பராசக்தி படமும் வெளியாகும் என்று தவெகவினர் பேசத் தொடங்கியுள்ளனர்.

தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் இன்று அளித்த பேட்டியில், விஜய் முன்னாள் நடிகர் என்று கூறி இருந்தார். ஆனால் தவெக தொண்டர்களோ தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தாமல் ஜனநாயகன் படத்தின் ரிலீஸை மனதில் வைத்து சோசியல் மீடியாவில் கொந்தளித்து வருவது பேசுபொருளாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+