“ஜனநாயகன் லீக்.. அதிர்ச்சியளிக்கிறது!” அரசுக்கு முக்கிய கோரிக்கை வைத்த ரஜினிகாந்த்
சென்னை: ஜனநாயகன் திரைப்படம் சோஷியல் மீடியாக்களில் கசிந்திருக்கும் நிலையில், இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். மேலும், இதை செய்தவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்.
தேர்தல் நேரத்தில், சென்சார் பிரச்சனையில் சிக்கியிருக்கும் இந்த திரைப்படம் எப்படி வெளியானது? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இப்படி இருக்கையில் நடிகர் ரஜினிகாந்தின் ட்வீட் கவனம் பெற்றிருக்கிறது.

"ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் யாராலோ வெளியிடப்பட்டிருப்பது அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது. திரை அமைப்புகள் இதற்கு எதிராகக் குரல் எழுப்பி, அரசு இதைச் செய்தவர்களைக் கண்டுபிடித்து கடுமையான தண்டனை அளிக்க வேண்டும். இது போன்ற குற்றம் இனியும் தொடரக்கூடாது" என ரஜினிகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
விஜய் அரசியல் களத்திற்கு வந்தது முதல், அவரை சுற்றி சலசலப்புகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இப்படி இருக்கையில் அவர் நடிப்பில் கடைசி திரைப்படமாக உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் 'ஜனநாயகன்', சென்சார் பஞ்சாயத்தில் சிக்கியது. படத்தில் பேசப்பட்டிருக்கும் கருத்துக்கள் சரச்சையை தூண்டும் வகையில் இருப்பதாக சொல்லப்பட்டது. படத்திற்கு இன்னும் சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலையில், படம் எப்போது வெளியாகும் என்று தெரியாத நிலை இருக்கிறது.
இந்நிலையில், படத்தின் முக்கிய சீன்கள் சில சோஷியல் மீடியாக்களில் லீக் ஆகின. இதனை தொடர்ந்து தற்போது முழு படமும் லீக் செய்யப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் யார் லீக் செய்தது என்பது இன்னும் தெரியவில்லை.
பொதுவாக படம் திரைக்கு வருவதற்கு முன்பாக கதாநாயகன், தயாரிப்பாளர், இயக்குநர், எடிட்டர் ஆகியோரிடம்தான் இருக்கும். தற்போது படம் லீக் ஆகியிருக்கிறது எனில், இங்கிருந்துதான் வந்திருக்கும் என்று பலரும் சந்தேகம் எழுப்புகின்றனர். குறிப்பாக தயாரிப்பாளருக்கு படத்தை லீக் செய்வதால் கோடி கணக்கில் நஷ்டம் ஏற்படும். இயக்குநர் மற்றும் எடிட்டருக்கு இது கெரியர் பிரச்சனை. ஆக இவர்கள் தரப்பில் லீக் இருக்க வாய்ப்பு இல்லை என்றும், அரசியல் காரணங்களுக்காக வேறு யாராவது லீக் செய்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம், ஜனநாயகன் படத்தை ஆதவ் அர்ஜுனா லீக் செய்திருக்கலாம் என்று சந்தேகம் கிளப்பியிருக்கிறார். சோஷியல் மீடியாக்களில் விஜய் மீது குற்றச்சாட்டு எழுப்பப்பட்டிருக்கிறது. படத்தின் காட்சிகள் சில விசில் சின்னத்திற்கு வாக்கு கேட்பதை போல இருப்பதாகவும் எனவே, விஜய் தரப்பு லீக் செய்திருக்கலாம் எனவும் பலரும் சந்தேகம் கிளப்புகின்றனர்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட் -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்!












Click it and Unblock the Notifications