சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மத்திய அரசு கொடுக்கிறது! வாய்ப்பை நழுவவிடாதீர்கள்! சிறுபான்மையின மாணவர்களுக்கு ஜவாஹிருல்லா அறிவுரை!

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைக்கு விண்ணபிக்க தவறவேண்டாம் என சிறுபான்மையின மாணவர்களுக்கு ஜவாஹிருல்லா அறிவுரை நல்கியுள்ளார்

டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், சிறுபான்மையின மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மத்திய அரசின் ஸ்காலர்ஷிப்க்கு விண்ணப்பிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான மேலும் சில விவரம் பின்வருமாறு;

லுங்கியுடன்.. தலையில் தொப்பி.. துப்பாக்கியுடன் வந்ததை மறந்துட்டீங்களா.. பகீர் கிளப்பிய பாஜக தலைவர்லுங்கியுடன்.. தலையில் தொப்பி.. துப்பாக்கியுடன் வந்ததை மறந்துட்டீங்களா.. பகீர் கிளப்பிய பாஜக தலைவர்

 இணையத்தில்

இணையத்தில்

அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளில் படிக்கும் சிறுபான்மையின மாணவர்களின் கல்வி ஒன்றிய அரசின் சார்பில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களும், உயர் கல்வி படிக்கும் மாணவர்களும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்களை,www.scholarships.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

 மமக கோரிக்கை

மமக கோரிக்கை

விண்ணப்ப விபரங்களை, முதற்கட்டமாக அந்தந்த பள்ளிகள் மற்றும் பள்ளிக் கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்து பரிந்துரைக்க வேண்டும். ஆனால், கனமழை காரணமாகக் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகப் பள்ளிகள் சரிவர இயங்கவில்லை, மாணவர்கள் வருகையும் இல்லை. இதன் காரணமாக மாணவர்கள் விண்ணப்ப பதிவு செய்வதற்கு இயலாத நிலை ஏற்பட்டு உள்ளது. சிறுபான்மையினர் உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப அவகாசத்தை, நீட்டிக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முதலமைச்சருக்குக் கடிதம் வாயிலாகக் கோரப்பட்டிருந்தது.

 மத்திய அரசு

மத்திய அரசு

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையினை தமிழக அரசு ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்றது. ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பிரி மெட்ரிக் உதவித் தொகை, 11 12 ஆம் வகுப்பு பயிலும் 'போஸ்ட் மெட்ரிக்' மாணவர்களுக்கான உதவித் தொகை, தகுதி மற்றும் தேவை அடிப்படையிலான உதவி தொகை ( Merit cum Means based Scholarship) , சிறுபான்மை சமூக மாணவிகளுக்கான ( Begum Hazrat Mahal National Scholarship) ஆகிய உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசத்தை 15.12.2021 வரை ஒன்றிய அரசு நீட்டித்து அறிவித்துள்ளது.

அறிவுரை

அறிவுரை

தமிழக அரசின் முன்னெடுப்பிற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நன்றியையும், பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கால நீட்டிப்பைப் பயன்படுத்தி இதுவரை விண்ணப்பிக்காத மாணவ - மாணவிகள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

English summary
Jawahirullah advise to Minority students, Dont miss the Union govt scholarships
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X