சபாஷ் பொன்முடி! ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா? ஜவாஹிருல்லா பாய்ச்சல்!
சென்னை: ஆர்.என்.ரவி ஆளுநரா இல்லை பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா என மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா வினவியுள்ளார்.
மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது எனக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

காமராஜர் பல்கலைக்கழகம்
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கவுரவ விருந்தினராக பங்கேற்க உள்ளார். பல்கலைக்கழகத்தின் இணை வேந்தரான தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சரை ஆலோசிக்காமல் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் நிகழ்வுகளை ஆளுநர் அறிவித்தது கண்டனத்திற்குரியது.

மாநில உரிமைகளை
மாநில அரசின் உரிமைகளைத் தொடர்ந்து புறந்தள்ளும் வகையில் ஆளுநர் நடந்து கொள்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. பல்கலைக்கழக வளாகங்களை தன்னுடைய கொள்கை சித்தாந்தத்தைப் பரப்புவதற்காக ஆளுநர் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார். கல்வியாளர் இல்லாத ஒரு அரசியல் பிரமுகரைத் தன்னிச்சையாக ஆளுநர் பட்டமளிப்பு விழாவிற்கு கவுரவ விருந்தினராக அழைத்திருப்பதுடன் பல்கலைகழக இணை வேந்தருக்கு உரிய நடைமுறை மரியாதையை அளிக்க மறுத்திருப்பதும் கடும் கண்டனத்திற்கு உரியது.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி தனது செயல்பாடுகள் வாயிலாகப் பாரதிய ஜனதா கட்சியின் அறிவிக்கப்படாத கொள்கை பரப்பு செயலாளராக ஆளுநர் செயல்பட்டு வருவது மீண்டும் வெட்டவெளிச்சமாகியுள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் சனாதனம் குறித்துப்பேசியதும், பின்னர் திராவிடம் குறித்து பேசியதும் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது மீண்டும் தமிழக அரசைச் சீண்டுகிற முயற்சியில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

அமைச்சர் பொன்முடி
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்று சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்கும் பொறுப்பைத் தட்டிக்கழித்து விட்டுத் தொடர்ந்து தனது அதிகாரப் போக்கை மீறி வரும் ஆளுநரின் செயல்பாட்டைக் கண்டித்து இந்த நிகழ்ச்சியைத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் புறக்கணிப்பதாக அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications