இந்தியா ஒற்றை தேசிய நாடு இல்ல.. இந்தி திணிப்பால் இவ்ளோ பிரச்சனையா? அமித்ஷாவுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை: இந்தியர்கள் அனைவரும் ஒருநாள் இந்தியை ஏற்க வேண்டும் என்று தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, "டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற 38வது அலுவல் மொழிக் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.

தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளுக்கும், அம்மொழிகளைப் பேசும் மக்களின் நலனுக்கு எதிராகவும் அவரது பேச்சு அமைந்து இருக்கிறது. அரசமைப்பு சட்டத்தின் அட்டவணையில் உள்ள இந்தி பேசாத மாநில மக்களின் 22 மாநில மொழிகளையும் அடியோடு ஒதுக்கி வைத்து, எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் செயல்படுவதே ஒன்றிய அரசின் திட்டம் என்பது உள்துறை அமைச்சரின் பேச்சில் வெளிப்படுகின்றது.
அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி கொள்கைகளுக்கு எதிரான, நம் நாட்டின் பன்மொழிக் கட்டமைப்பிற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்தியைத் திணிக்கும் முயற்சியில் ஒன்றிய அரசு தொடர்ந்து இயங்கி வருவது கண்டனத்துக்குரியது. இந்தியா என்பது ஓர் ஒற்றை தேசிய நாடு அல்ல, பல்வேறு இனங்களின் கூட்டுத்தொகுப்பு.
அந்தப் பல்வேறு இனங்களில் தனித்துவம் என்பது மொழி அடிப்படையில் வரையறுக்கப்படுகிறது. அனைத்து மொழிகளுக்கும் இடையில் சமத்துவம் நிலவுவதுதான் விடுதலையின் அடையாளம். இந்தியாவில் 22 மொழிகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை. 22 மொழிகளும் எட்டாவது அட்டவணையில் அரசியல் சட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
அந்தந்த மாநில மொழிகள் அந்தந்த மாநிலத்தின் ஆட்சி மொழியாக வேண்டும். மொழிகளுக்கு இடையில் சமத்துவம் இருந்தால்தான் மொழி பேசும் மக்களுக்கு இடையில் சமத்துவம் இருக்கும். ஒரு மொழியை திணித்தால் எந்த மொழி திணிக்கப்படுகிறதோ அந்த மொழிக்கு உரியவர்கள்தான் எல்லா நிலையிலும் ஆதிக்கத்தில் வருவார்கள்.
இந்தி திணிப்பு என்பது வெறும் மொழியினை பற்றிய செய்தி அல்ல. நம்முடைய சந்தை பறிபோகும், நம்முடைய வேலைவாய்ப்பு பறிபோகும், தொழில் வளர்ச்சி பறிபோகும். ஒற்றுமையுடன் வாழும் மக்களை மொழியின் அடிப்படையில் பிரிக்கும் உத்தியை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
மொத்த பார்முலாவையே மாற்றும் அண்ணாமலை.. இதுவரை இல்லாத புதிய திட்டத்தை கையில் எடுக்கிறாரே.. செம -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சலசலப்புகளுக்கு இனி இடமில்லை.. அமித்ஷாவை சந்தித்த தமிழக பாஜக உயர்மட்டக்குழு.. அடுத்தது என்ன? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
அண்ணாமலையுடன் இணையும் மாஜி டிஜிபி.. சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏகே விஸ்வநாதன் யார்? -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
அடிச்சு ஆடும் அண்ணாமலை! 3 கட்சிகளுக்கும் ஒரே நேரத்தில் செக்! உள்ளாட்சி தேர்தலுக்கு பக்கா ப்ளான்! -
"மாற்றத்தை விரும்பும் மக்கள் ஒன்னா சேருவோம்" மக்கள் மேடை இயக்கம் குறித்து லதா ரஜினிகாந்த் விளக்கம்!












Click it and Unblock the Notifications