சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

யாராக இருந்தாலும் தண்டிக்கவும்; எஸ்.ஐ. கொலை துயரம் அளிக்கிறது; ஜவாஹிருல்லா வேதனை!

Google Oneindia Tamil News

சென்னை: ஆடு திருடர்களால் திருச்சி நவல்பட்டு காவல் உதவி ஆய்வாளர் கொலை செய்யப்பட்ட நிகழ்வு தனக்கு மிகுந்த வேதனையை தருவதாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்;

Jawahirullah condolences to the Sub inspector Boominathan family

''திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆக பணியாற்றி வரும் பூமிநாதன்
புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பல் ஒன்றினால் அரிவாளால்சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டது மிகுந்த வேதனை அளிக்கின்றது.

இரவு பகல் என்று பாராமல் உயிருக்கும் மேலாகக் கடமையை நேசித்து பணியாற்றிய பூமிநாதன் அவர்களின் தியாகம் உன்னதமானது. அவரது கடமையுணர்வும் தியாகமும் தமிழகக் காவல்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளது.

அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் ஆழ்ந்தஇரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி - தெலங்கானா அரசு

இச்சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் இனி தமிழகத்தில் நிகழாவண்ணம் முன்மாதிரியானநடவடிக்கைகளை மேற்கொள்ள காவல்துறை உயர் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன்''. இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.

English summary
Jawahirullah condolences to the Sub inspector Boominathan family
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X