கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை இலவசமாக கொடுங்க! மத்திய அரசுக்கு ஜவாஹிருல்லா புது கோரிக்கை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் பெண்களுக்கு மேல் இந்தியாவில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரம் தெரிவித்துள்ளார்.

Jawahirullah demands, uterus cancer vaccine Union govt should be provided free of cost

இது தொடர்பாக ஜவாஹிருல்லா விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

இந்தியாவில் ஒவ்வொரு எட்டு நிமிடத்திற்கும் ஒரு பெண் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் இறந்து போகிறார் என்கிறது புள்ளி விவரம். ஒவ்வொரு ஆண்டும் 1.25 லட்சம் பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அதில் 75,000 பேர் உயிரிழப்பதாகவும் தெரிய வருகிறது.

இந்த நோயை ஹெச்.பி.வி. தடுப்பூசியைச் செலுத்துவதின் வாயிலாகத் தடுக்க முடியும் என்று பல்வேறு நாடுகளின் அனுபவங்கள் நமக்குச் சுட்டிக் காட்டுகின்றன. இந்தியாவில் தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசி தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

அரசு இதுவரை இந்த தடுப்பூசியை இலவசமாகக் கர்ப்பிணிப் பெண்களுக்கு வழங்கவில்லை என்பதனை சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் இந்த தடுப்பூசியை உற்பத்தி செய்து வரும் நிலையில் ஒன்றிய அரசு 11 வயது முதல் 15 வயது வரை உள்ள பெண் குழந்தைகளுக்கு விலையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+