"தூங்கா இரவுகள்".. அலறும் ஆர்எஸ்எஸ் + பாஜக.. "பெரிய சவால், எல்லாரும் இறங்குங்க".. ஜவாஹிருல்லா அதிரடி
சென்னை: அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கின்ற அனைத்து கட்சிகளும் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும், ஓரணியில் திரண்டு இதற்காக போராட வேண்டும் என்று மூத்த தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.
மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜவாஹிருல்லா, பாஜக மற்றும் ஆர்எஸ்ஸை கடுமையாக சாடினார்.. மேலும் முக்கிய வேண்டுகோள்கள் சிலவற்றையும் அப்போது வெளிப்படுத்தினார்.

இஸ்லாமியர்கள்
ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம், "தமிழகத்தில் ரொம்ப காலமாகவே, சிறைவாசிகளாக உள்ள இஸ்லாமியர்களை விடுதலை செய்வதற்கு, ஆதிநாதன் குழு பரிந்துரை ஏற்று ஆளுநர் ஒப்புதல் அளிக்க தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். மத்திய பாஜக அரசு சமூகநீதியை குழிதோண்டி புதைக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறது... கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறக்கூடிய நிலையில் அந்த மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத கல்வி வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு ரத்து செய்து சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்கள்.. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

தூங்கா இரவுகள்
முதல் கட்டமாக, முற்படுத்த வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு என்ற ஒரு அறிவிப்பை செய்தது.. இதன் மூலமாக அரசாங்கத்தின் வேலை வாய்ப்புகள் மற்றும் கல்வி வாய்ப்புகளில் குறிப்பிட்ட முற்பட்ட வகுப்பினர் மற்றும் முக்கியமான இடங்களை பெறக்கூடிய நிலை ஏற்படுத்தியுள்ளது.. ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத ஒற்றுமை பயணம் நடத்தினார்.. இந்தப் பயணம் அனைத்து மாநிலங்களிலும் ஒரு எழுச்சியை ஏற்படுத்தியது.. இந்த எழுச்சிதான், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர்களுக்கு தூங்கா இரவுகளை தந்திருக்கிறது..

ஒரே சாய்ஸ்
ராகுல் காந்தியினுடைய பதவி பறிப்பு என்பது பாஜக தலைவர்கள் விரக்தி உச்சத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்திருக்கிறது. சமூக நீதி மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கு விரோதமாகவும் பாஜக செயல்பட்டு வருகிறது.. இதன் எடுத்துக்காட்டாகவே, ராகுல் காந்தி எம்பி பதவி பறிக்கப்பட்டுள்ளது... அவதூறு பேசினார் என்ற வழக்கில் நீதிமன்றம் தண்டனை விதிக்கப்பட்டு, அதே நீதிமன்றத்தில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டு, அவருக்கு மேல் முறையீடு செய்வதற்கான ஒரு வாய்ப்பும் தரப்பட்டது..

ஜஸ்ட் 24 மணி நேரம்
ஆனால், அப்படி வாய்ப்பு கொடுக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள்ளேயே, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல் காந்தியிடமிருந்து பறித்தது பாஜகவினரின் கோழைத்தனமான செயலாகும்.. இது ஜனநாயகத்திற்கு நம்முடைய நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரிய சவாலாக இருக்கிறது.. இந்த சவாலை முறியடிக்க கூடிய வகையில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கின்ற அனைத்து கட்சிகளும் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும்.. அனைவருமே ஓரணியில் திரண்டு இதற்காக போராட வேண்டும்" என்று ஜவாஹிருல்லா என்று கேட்டுக் கொண்டார்.

ஜவாஹிருல்லா நறுக்
கடந்த 2 நாட்களுக்கு முன்புகூட, ராகுல் காந்தி விவகாரத்திற்கு வன்மையான கண்டனத்தை ஜவாஹிருல்லா பதிவு செய்திருந்தார்.. இதுகுறித்து வெளியிட்டிருந்த அறிக்கையில், அதானி விவகாரத்தையும் சுட்டிக்காட்டியிருந்தார் ஜவாஹிருல்லா... "அதானி விவகாரத்தில் சிக்கியுள்ள பாஜக, அதுகுறித்து கேள்வி எழுப்பும் ராகுலைக் கண்டு அஞ்சுகிறது என்பதின் வெளிப்பாடாகவும் இந்த கோழைத்தனமான நடவடிக்கை அமைந்துள்ளது. ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யும் இந்த உத்தரவை திரும்பப் பெறும் வரை, ஜனநாயகத்தை மீட்கும் அறப்போராட்டம் தொடர வேண்டும்" என்று வலிய கோரிக்கை ஒன்றை ஜவாஹிருல்லா விடுத்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications