கோழிக்கறி கடை இருக்கே.. "மாட்டிறைச்சி" கடை எங்கே? ஆவேசம் ஜவாஹிருல்லா .. முதல்வருக்கு முக்கிய கோரிக்கை
ஈரோடு அருகே 13 மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்டதற்கு ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: ஈரோடு புன்செய் அருகே மாட்டிறைச்சி கடைகள் இடிக்கப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அதுகுறித்து தமிழக முதல்வருக்கும் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
ஈரோடு அருகே மாட்டு இறைச்சி கடைகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனங்கள் கிளம்பி வருகின்றன.. திடீரென எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, இந்த மாட்டிறைச்சி கடைகள் இடிக்கப்பட்டது ஏன் என்றும் தமிழக அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
இது தொடர்பாக ஈரோடு அருகே அருந்ததியினரின் மாட்டிறைச்சி கடைகள் அகற்றப்பட்ட விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று, முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், கடிதம் எழுதியிருந்தார்.

13 குடும்பங்கள்
அத்துடன், மிக முக்கிய கோரிக்கையையும் அதில் விடுத்திருந்தார். "மார்க்கெட்டுக்கு அருகில் மற்ற இறைச்சி கடைகள் எல்லாம் செயல்பட்டு வருகிறது... ஆனால், மாட்டிறைச்சி கடை மட்டும் நடத்த கூடாது என்பது சரிகிடையாது.. இந்த 13 குடும்பங்களின் ஒரே வாழ்வாதாரம் மாட்டிறைச்சி விற்பனை செய்வதுதான்... அப்படி இருக்கும்போது, நிரந்தரமான கடை இப்போது இவர்களுக்கு இல்லாததால் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.. 26 ஏக்கர் பரப்பளவு உள்ள சந்தையில் ஏதோ ஒரு பக்கம் மாட்டிறைச்சி கடை நடத்துவதால் பாதிப்பு எதுவும் ஏற்படப் போவதில்லை..

கலெக்டர்
இருந்தாலும், பொருத்தமான வேறொரு இடத்தில் சுகாதாரமான முறையில் கடைகளை நகராட்சி நிர்வாகமே அமைத்து கொடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாக முதன்மை செயலாளர் (நகராட்சி நிர்வாகம்) முதற்கொண்டு, ஈரோடு மாவட்ட கலெக்டர் மற்றும் நகராட்சி ஆணையருக்கு மனுக்கள் அளித்தும் மக்களின் கோரிக்கைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. அதனால், முதல்வர், இப்பிரச்சனையில் தலையிட்டு பாதிக்கப்பட்ட 13 அருந்ததியர் குடும்பங்களும் மறுபடியும் மாட்டிறைச்சி கடை நடத்த தேவையான நடவடிக்கை எடுத்து உதவிட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

13 குடும்பங்கள்
இந்நிலையில், இதே விவகாரத்தை மனிதநேய மக்கள் கட்சி கையில் எடுத்துள்ளது.. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்எல்ஏ கண்டனம் தெரிவித்து, தமிழக அரசுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார்.. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தையில் சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த 13 குடும்பங்கள் மாட்டிறைச்சிக் கடை நடத்தி வந்துள்ளனர். திடீரென்று எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் நகராட்சி நிர்வாகம் 22.11.2022 அன்று புல்டோசர் கொண்டு அனைத்துக் கடைகளையும் இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர். கடை நடத்தியவர்கள் தொடர்ச்சியாக நிர்வாகத்தை அணுகி மீண்டும் தொழில் செய்ய கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.

சீறும் ஜவாஹிருல்லா
ஆனால் நகராட்சி நிர்வாகம் எந்த அனுமதியும் வழங்கவில்லை. அங்கே கோழி ஆடு மீன் இறைச்சி கடைகள் எல்லாம் செயல்பட்டு வரும் நிலையில் மாட்டிறைச்சி கடை மட்டும் அகற்றப்பட்டு இருப்பது கண்டனத்துக்குரியது. புன்செய் புளியம்பட்டி நகராட்சிக்குட்பட்ட வாரச் சந்தை 26 ஏக்கர் பரப்பளவு கொண்டது என தெரிகிறது. இவற்றில் மாட்டுக்கறி கடை மட்டும் அகற்றப்பட்டு இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் நல்லாட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட 13 அருந்ததியர் குடும்பங்களும் மீண்டும் மாட்டிறைச்சி கடை நடத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக நகராட்சி நிர்வாகமும் மாநில அரசும் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications