5 மாவட்டங்களில் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள்! அரசுக்கு நன்றியும் பாராட்டும்! மமக வரவேற்பு!
சென்னை: 5 மாவட்டங்களில் புதிதாக சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கும் அரசின் நடவடிக்கைக்கு மனிதநேய மக்கள் கட்சி நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற நடவடிக்கையால் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு உதவிகள் நேரடியாகவும் இலகுவாகவும் கிடைக்க வழிவகை செய்யும் எனத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

சிறுபான்மையினர் நலன்
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் புதிய பணியிடங்களுடன் மாவட்ட சிறுபான்மை அலுவலகங்களை அமைக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி உட்பட சிறுபான்மை அமைப்புகள் கோரி வந்தன.இந்நிலையில் சட்டசபையில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

5 மாவட்டங்கள்
அதன் அடிப்படையில் சென்னை, வேலூர், விழுப்புரம், திருநெல்வேலி, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில் புதிய அலுவலகங்கள் அமைக்கப்படுகின்றன என்றும், அதனை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை சிறுபான்மையினர் முஸ்லிம்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நன்றி -பாராட்டு
தமிழக அரசின் இதுபோன்ற நடவடிக்கையால் சிறுபான்மையின முஸ்லிம்களுக்கு கிடைக்கக்கூடிய அரசு உதவிகள் நேரடியாகவும் இலகுவாகவும் கிடைக்க வழிவகை செய்யும். இந்த திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்தக் கட்டம்
இதனிடையே அடுத்தகட்டமாக திருச்சி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, உள்ளிட்ட மாவட்டங்களிலும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என சிறுபான்மையினர் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications