சாதி வெறியை இனியும் சகிக்க முடியாது! நவீன யுகத்திலும் இப்படியா? கொதிக்கும் ஜவாஹிருல்லா!
சென்னை: சாதி வெறியின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்களை இனி ஒரு போதும் சகிக்க முடியாது என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் பட்டிலின இளைஞர்கள் மீது சாதி வெறி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜவாஹிருல்லா கூறியிருப்பதாவது;

பட்டியலின இளைஞர்கள் மீது சிறுநீர்: நெல்லை மாவட்டம் மணிமுத்தீஸ்வரம் பகுதியைச் சார்ந்த பட்டியலின இளைஞர்கள் இருவர் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு திரும்பிய போது 6 பேர் கொண்ட கும்பல் நிர்வாணப்படுத்தியும், இவர்கள் மீது சிறுநீர் கழித்தும் தாக்குதல் நடத்திய செயலுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடும் கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
நிர்வாணப்படுத்தி துன்புறுத்தி: அந்த கும்பல் இளைஞர் இருவரையும் நிர்வாணப்படுத்தி துன்புறுத்தியதோடு அவர்களிடமிருந்து அலைபேசிகள் இருசக்கர வாகனங்கள் மற்றும் ஏடிஎம் ரொக்க பணம் போன்றவற்றையும் பறித்திருப்பதாக தெரிகிறது. இதையடுத்து வன்கொடுமை வழக்கு, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து 6 பேரை போலீசார் கைது செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
சாதி வெறியை சகிக்க முடியாது: இந்த நவீன யுகத்திலும் சாதி வெறியின் பெயரால் நடத்தப்படும் தாக்குதல்களை ஒருபோதும் சகிக்க முடியாது. "இருட்டறையில் உள்ளதடா உலகம்- சாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே" என்று பாடினார் பாவேந்தர் பாரதிதாசனார். சாதி உணர்வை வளர்க்கும் ஃபாசிச சக்திகள் தமிழ்நாட்டில் செய்துவரும் குழப்பங்களே பட்டியலின மக்கள் மீதான வன்கொடுமைகளாக வடிவெடுக்கின்றன.
இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் இனி எப்போதும் நடைபெறாத வண்ணம் அரசு உறுதியான நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதே நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சின்னத்துரை என்ற பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் மீதும் அவரது சகோதரி மீதும் ஓரிரு மாதங்களுக்கு முன்பு சாதிய வன்மத்தோடு சக மாணவர்களே தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் தான் நெல்லை மாவட்டம் முழுவதும் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம்களை அதிகளவில் நடத்த வேண்டும் என 2 நாட்களுக்கு முன்னர் செல்வப்பெருந்தகை வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications