நிலவில் இந்தியா! சாதனைகளுக்கு விதை தூவிய ஜவஹர்லால் நேரு! இஸ்ரோவை தொடங்கியது அவர் தான்! -ஜவாஹிருல்லா
சென்னை: சந்திரயான் 3 விண்கலம் மூலம் இந்தியா சரித்திர சாதனை புரிந்திருக்கும் நிலையில் அதற்கான விதையை போட்டவர் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவை தொடங்கியது நேரு தான் எனக் குறிப்பிட்டுள்ள அவர், இஸ்ரோ அறிவியலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
''நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையை நமது நாடு இந்தியா சந்திரயான் 3 விண்கலம் மூலம் சாதித்துள்ளது. நமக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது.
நிலாவைத் தொட சந்திரயான் திட்டம் மூலம் எடுக்கப்பட்ட மூன்று முயற்சிகளிலும் முத்திரைப் பதித்த திட்டத்தின் இயக்குநர்களாக மயில்சாமி அண்ணாதுரை, வனிதா முத்தையா மற்றும் வீர முத்துவேல் ஆகிய தமிழர்கள் செயலாற்றியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கின்றது.
மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ள இஸ்ரோ அறிவியலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து இந்தியர்களுக்கும் இது ஒரு பெரும் மகிழ்ச்சியை அளிக்கும் நிகழ்வாகும்.
இந்தச் சாதனைகளுக்கு விதை போட்டவர் தொலைநோக்கோடு இஸ்ரோவைத் தொடங்கிய நமது முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு என்பதை நெகிழ்வோடு இவ்வேளையில் நினைவு கூர்கிறேன். இத்தகைய வானலாவிய இந்தியச் சாதனை வரலாறு மேலும் தொடர நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்.''
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications