முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு! இந்தப் போக்கை கைவிடுக! ஜவாஹிருல்லா கடும் கண்டனம்!
சென்னை: முஸ்லீம் அமைப்புகளை அச்சுறுத்தவே என்.ஐ.ஏ.ரெய்டு நடத்தப்படுவதாக கூறியுள்ள ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் நடத்தப்பட்ட சோதனைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் என்ஐஏ சோதனை செய்யலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு;

''ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடை பெற்ற ஒரு கொலை வழக்கு தொடர்பாக எஸ்டிபிஜ கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை என்ஐஏ அதிகாரிகள்சோதனை நடத்தி இருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. நாட்டில் மணிப்பூர் பிரச்சனை பற்றி எரிந்து கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் அதை மடைமாற்றும் நோக்கோடு இந்த சோதனை நடத்தப்படுவதாகவே கருத வேண்டிஇருக்கிறது.
தமிழகத்தில் திமுக அரசை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் அமைச்சர்பெருமக்களை அமலாக்கத் துறை மூலம் அச்சுறுத்தி வரும் ஒன்றிய பாஜக அரசு முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சிகளின்தலைவர்களைத் தேசிய புலனாய்வு நிறுவனம் (என்ஐஏ) எனப்படும் ஒன்றிய புலனாய்வுஅமைப்பு மூலம் அச்சுறுத்தி வருகிறது.
நாடு முழுவதும் பலவேறு தீவிரவாத கொடும் செயல்களில் ஈடுபட்டு வரும் சங்கப்பரிவாரஅமைப்புகளைக் கண்டும் காணாமலும் இருந்து வரும் என்ஐஏ ஜனநாயக ரீதியில்செயல்பட்டு வரும் முஸ்லிம் அமைப்புகளை அச்சுறுத்தும் வகையில் செயல் பட்டு வருவதுகண்டிக்கத்தக்கது.
முஸ்லிம் சமூக,அரசியல் இயக்கங்களின் தலைவர்களை அச்சுறுத்தும் போக்கை என்ஐஏ கைவிடவேண்டும். தமிழ்நாட்டில் நடக்கும் கொலை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் தமிழ்நாட்டு காவல்துறையே கையாள வேண்டும்
அதிமுக-பிஜேபி கூட்டணி முதல்வரான எடப்பாடிஆட்சிக் காலத்தில் என்ஐஏ விடம் ஒப்படைக்கப்பட்ட வழக்குகளைத் நம் மாநில காவல்துறையே விசாரிக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சிபிஐ விசாரணை நடத்த அளிக்கப்பட்ட முன் அனுமதியைத் திரும்பப் பெற்றுக் கொண்டது போல் தமிழ்நாட்டில் மாநில அரசின் முன் அனுமதி பெறாமல் என்ஐஏ சோதனைசெய்யலாம் என்ற சட்டத்தைத் திருத்தக் கொண்டு வரத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.
தமிழகம் அமைதி பூங்காவாகச் செயல்பட்டு வரும் நிலையில் தேவையற்ற பதற்றத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. நெல்லை முபாரக் அவர்கள் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகளால் நடத்தப்பட்ட சோதனை கடும் கண்டனத்துக்குரியது.''
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications