மத்திய அரசுக்கு புதிய நெருக்கடி; சி.ஏ.ஏ.வை ரத்து செய்ய வேண்டும்; ஜவாஹிருல்லா மீண்டும் போர்க்கொடி!
சென்னை: 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது போல் குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் வாபஸ் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருப்பது சளைக்காமல் அல்லும் பகலும் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என குறிப்பிட்டிருக்கிறார்.
இந்திய விவசாயிகளின் போராட்டம் உலக வரலாற்றில் உன்னத இடத்தை பிடிக்கும் என ஜவாஹிருல்லா நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

கடும் குளிர்
மூன்று வேளான் சட்டங்களை எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர். டெல்லியில் ஒன்றிய அரசின் பல்வேறு அடக்குமுறைக்கு அஞ்சாமல் விவசாயிகள் அறவழியில் கடும் போராட்டங்களைக் கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று முன்னெடுத்தனர். கடும் குளிரிலும், கொடும் வெட்பத்திலும் கொரோனா அச்சுறுத்தலிலும் மனம் தளராமல் தலைநகர் டெல்லி எல்லையில் விவசாயிகள் போராடி வந்தனர்.

தகுந்த பாடம்
இந்திய வரலாற்றில் மட்டும் அல்ல உலக வரலாற்றில் உரிமைகளுக்காக நடத்தப்பட்ட உன்னத போராட்டமாக விவசாயிகளின் போராட்டம் அமைந்தது. மக்கள் உணர்வுகளுக்கு எதிராகவும் நலன்களுக்கு எதிராகவும் சட்டங்களை இயற்றி வரும் பிரதமர் மோடியின் சர்வாதிகார போக்கிற்கு விவசாயிகள் தங்கள் உன்னத போராட்டத்தின் மூலம் தகுந்த பாடத்தைக் கற்பித்துள்ளனர்.

நாடாளுமன்றம்
பிரதமர் மோடி அவர்கள் மூன்று வேளான் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகின்றன என்ற அறிவிப்பை நடைமுறைக்குக் கொண்டு வரும் வகையில் வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மூன்று வேளான் சட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன என்ற சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.
மக்களின் உண்மையான போராட்டம் சர்வாதிகாரத்தையும் அடிபணிய வைக்கும் என்பதற்கு மூன்று வேளான் சட்டங்களும் ரத்து என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு மற்றொரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

பிடிவாத போக்கு
விவசாயிகளின் அறவழிப் போராட்டத்தைத் திசை திருப்ப ஒன்றிய அரசு எடுத்த அத்தனை முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. மூன்று வேளான் சட்டங்களை ஆதரித்து அதிமுகவிற்கும் விவசாயிகள் மறைமுகமாகப் பாடம் புகட்டி உள்ளனர் என்றே கருதலாம். பிரதமர் மோடியின் பிடிவாத போக்கினால் வேளான் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்ட களத்தில் உயிர் நீத்த 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் அனைவருக்கும் கணிசமான இழப்பீடு ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

சி.ஏ.ஏ.
மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்து விளக்குதல் முதலிய மக்கள் விரோத சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications