சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆமா.. பேனர் வெச்சது தப்புதான்.. நீதிபதியிடம் ஜெயகோபால் ஒப்புதல்

பேனர் வைத்தது தவறுதான் என்று ஜெயகோபால் ஒப்புதல் அளித்துள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    சுபஸ்ரீ விவகாரம்.. முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு அக்.11 வரை சிறை-வீடியோ

    சென்னை: "சட்டவிரோதமாக பேனர் வைத்தது உண்மையா" என்று நீதிபதி கேட்கவும்... "ஆமாம்.. பேனர் வைத்தேன்.. தப்புதான்" என்று கோர்ட்டில் நீதிபதியிடம் ஜெயபால் தெரிவித்துள்ளார்.

    2 வாரம் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில், நேற்று ஒகேனக்கல்லில் தலைமறைவாக இருப்பதை கண்டறிந்தனர்.

    Jayagopal in Puzhal jail

    இதையடுத்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்த ஒரு தனியார் ரிசார்ட்டில் ஜெயபால் குடும்பத்துடன் தங்கி இருப்பது தெரியவந்ததும் ரிசார்ட்டை சுற்றி வளைத்து ஜெயகோபாலை போலீசார் கைது செய்தனர்.

    இதையடுத்து, சென்னைக்கு அவரை அழைத்து வந்தனர். இன்று காலை, 11 மணியளவில் ஆலந்தூர் கோர்ட்டில் ஜெயகோபால் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் நீதிபதி ஸ்டார்லி, "சட்டவிரோதமாக பேனர் வைத்தது உண்மையா?' என்று கேட்டார்.

    அதற்கு ஜெயகோபால், "ஆமாம்.. சட்டவிரோதமாக பேனர் வைதேன்.. பேனர் வைத்தது தவறுதான்" என்று நீதிபதியிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து வருகிற அக்டோபர் 11-ந்தேதி வரை 14 நாட்கள் அவரை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் போலீசார், ஜெயகோபாலை குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று மருத்துவ பரிசோதனைக்கு பிறகு புழல் சிறையில் அடைத்தனர்

    காட்டு பகுதியில்.. மல்லிகை ஃபார்ம்.. நண்பர் பெயரில் ரூம் எடுத்து தங்கிய ஜெயகோபால்..!காட்டு பகுதியில்.. மல்லிகை ஃபார்ம்.. நண்பர் பெயரில் ரூம் எடுத்து தங்கிய ஜெயகோபால்..!

    ஜெயகோபால் கைது பற்றி சுபஸ்ரீ குடும்பத்தினர் கருத்து சொல்லும்போதும், "ஜெயகோபால் கைது நடவடிக்கை கொஞ்சம் நிம்மதியா இருக்கு. ஆனால், அவருக்கு உரிய தண்டனையை கோர்ட்தான் வழங்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர்.

    நேற்று ரிசார்ட்.. இன்று ஜெயில்.. நாளை சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துவிடாமல் இருக்க கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது. ஜெயகோபாலிடம் இனி நடக்க போகும் விசாரணைக்கு பிறகு சுபஸ்ரீ விவகாரத்தில் முக்கிய திருப்பம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Justice action order for EX AIADMK councilor Jayagobal over Subasri Banner Issue
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X