”இன்னும் டை அடிக்கிறத விடல போல..” ஜெயக்குமார்- ஆர்எஸ் பாரதி ஜாலி உரையாடல்! வெடித்து சிரித்த இன்பதுரை
சென்னை: தேர்தல் நடைமுறைகள் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடந்தது. அதில் திமுக அதிமுக பிரதிநிதிகளுக்கு அருகருகே சீட் போடப்பட்டு இருந்த நிலையில், இக்கூட்டத்தில் பங்கேற்ற திமுகவின் ஆர் எஸ் பாரதியும் அதிமுகவின் ஜெயக்குமாரும் மாறி மாறி கிண்டல் செய்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது குறித்த அரசியல் கட்சிகளின் கருத்துகளைக் கேட்கத் தலைமைத் தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. அரசியல் கட்சிகளின் ஆலோசனைகளைக் கேட்டு, நடைமுறை சிக்கல்கள் இருந்தால் அதைத் தீர்க்கவே தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்திருந்தது. இதற்காக அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் நடத்தி வருகிறது.

ஆலோசனைக் கூட்டம்
அதன்படி சென்னையில் இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று பிற்பகல் நடந்த இந்தக் கூட்டத்திற்குத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமை தாங்கினார். இதில் மாநிலத்தில் உள்ள தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற்ற அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.. இதில் அங்கீகரிக்கப்பட்ட பாஜக, காங்கிரஸ் உட்பட 5 தேசிய கட்சி பிரதிநிதிகள் மற்றும் திமுக, அதிமுக உட்பட அங்கீகரிக்கப்பட்ட 12 மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
ஜெயக்குமார்- ஆர்எஸ் பாரதி
இந்தக் கூட்டத்தில் திமுக அதிமுக பிரதிநிதிகளுக்கு அருகருகே இருக்கை போடப்பட்டு இருந்தது. அதிமுக சார்பில் இந்தக் கூட்டத்தில் ஜெயக்குமார் மற்றும் இன்பதுரை ஆகியோர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்க சற்று நேரம் இருந்த போது தான் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி அங்கு வந்து அமர்ந்தார். அப்போது ஜெயக்குமாருக்கும் ஆர் எஸ் பாரதிக்கும் இடையே நடந்த ஜாலியான உரையாடல் இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.
மாறி மாறி கிண்டல்
ஆர் பாரதி உட்கார வரும் போது அவரை பார்த்து ஜெயக்குமார், "டை அடிக்கிறத இன்னும் விடல போல இருக்கு" என்று ஜாலியாக கேட்டார். அதற்கு ஆர் எஸ் பாரதியும், "டை அடிக்காம வேற என்ன பண்றது" என்று ஜாலியாக பதிலளித்தார். மேலும் அவர், "டை அடிச்சால் தான் சுறுசுறுப்பா தெரியுது.. இல்லைனா ஏதோ சோர்வா இருக்கற மாதிரி இருக்கு" என்று சிரித்துக் கொண்டே விளக்குகிறார்.
அதற்கு ஜெயக்குமார், "அடடே.. டை அடித்தால் தான் பிரிஸ்க் இருக்கு சொல்றீங்க" என சொன்னவர்.. அப்படியே திரும்பி, "ஏம்பா டை அடிச்சா தான் பிரிஸ்கா தெரியுதாமே" என்று சொல்கிறார். அதற்கு ஆர் எஸ் பாரதி ஏதோ ஒரு வாரம் ஆச்சு என்பது போல சொல்கிறார். உடனே ஜெயக்குமார், "டை அடித்தவரை தேடி கண்டுபிடித்து ஒரு விருது கொடுத்துவிடுங்கள்" என்கிறார்.
அட நீங்க வேற
உடனே ஆர் எஸ் பாரதி, ஆமா.. நீங்க தான ஏதோ மீட்டிங்கில் சொன்னீர்கள்" என்று சொல்ல.. ஜெயக்குமார் அட நீங்க வேறு ஏன் என்பது போல ரியாக்ட் செய்கிறார். இருவரும் இப்படி மாறி மாறி ஜாலியாக பேசுவதை நடுவே இருந்த இன்பதுரை கேட்டுச் சிரித்துக் கொண்டு இருந்தார்.
ஜெயக்குமார் கட்சி வேறுபாடுகளைத் தாண்டி பல்வேறு கட்சிகளிலும் நண்பர்களைக் கொண்டவர். மேலும், எப்போதும் ஜாலியாக பேசுவதே அவரது ஸ்டைல். இதற்கிடையே கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஜெயக்குமார் ஆர் எஸ் பாரதி இருவரும் மாறி மாறி கிண்டல் செய்த இந்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சமாதானமாகும் அண்ணாமலை?.. பேட்மிண்டன் மைதானத்துக்கே தேடிப்போன மத்திய அமைச்சர்! பின்னணி -
மதுரை வடக்கு.. பிடிவாதம் காட்டிய மாணிக்கம் தாகூர்.. கண்டுகொள்ளாத திமுக! விருதுநகர் தொகுதியும் போச்சா -
அண்ணா நகர் முதல் வில்லிவாக்கம் வரை.. சென்னையில் 6 சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு ‘கல்தா’.. லிஸ்ட் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்! -
ஒரே சமூகம்.. ஓட்டுகளை பிரிக்கும் சுந்தர் சி.. பிடிஆருக்கு செம டஃப்.. திடீர் வேட்பாளர் ஆனது எப்படி? -
120 வாக்குறுதிகள்.. லிஸ்ட் போட்ட டிடிவி தினகரன்.. விட்டதை பிடிக்க அமமுக ஸ்கெட்ச் -
Election Exclusive: வசூல்ராஜா ஹீரோவுக்கு 0..காமெடியன் கருணாஸூக்கு 1! அரசியலின் இன்னொரு மதிமுக மநீம? வைகோ 2.0 கமல்ஹாசன்? -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
விஜயபாஸ்கரை பார்த்து பயம்.. செந்தில் பாலாஜிக்கு தில் இருக்கா.. கோவை தெற்கு அதிமுக வேட்பாளர் தடாலடி -
கோவை திமுகவை துரத்தும் 25 வருட தோல்வி.. செந்தில்பாலாஜி மூலம் மாறுமா களம்.. ஸ்டாலின் பிளானின் பின்னணி











Click it and Unblock the Notifications